புதன்கிழமை, ஜனவரி 15, 2025

1.5 கோடி சம்பளம் , கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளர்.. நான்கு மடங்கு லாபம் பார்த்த உலக நாயகன்

உலக நாயகன் கமலஹாசனை பொருத்தவரைக்கும் தமிழ் சினிமாவில் தன்னால் முடிந்த எல்லா புது முயற்சிகளையும் தன்னுடைய படங்களில் எடுத்திருக்கிறார். பெரும்பாலும் அவருடைய முயற்சிக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அந்தப் படங்களும் வசூல் ரீதியாக கமலுக்கு வெற்றியை கொடுத்தன.

கமலஹாசனுக்கு எந்த அளவுக்கு சினிமாவை பற்றிய தொழில்நுட்பங்களும், நுணுக்கங்களும் தெரியுமோ அதே அளவுக்கு சினிமாவின் வியாபார யுக்தியும் தெரியும். கமலஹாசனை பற்றி குறைவாக எடை போட்டு ஒரு தயாரிப்பாளர் அவருக்கே விபூதி அடிக்கப் பார்த்திருக்கிறார். கமலோ தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை அந்த தயாரிப்பாளரிடம் நிரூபித்து விட்டார்.

Also Read: 19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன?

உலகநாயகன் கமல் எடுத்த வித்தியாசமான முயற்சிகளில் ஒன்று தான் அவ்வை சண்முகி திரைப்படம். பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய ஹீரோக்கள் பெண் வேடமிட்டு நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே பெண் வேடத்தில் வந்திருப்பார்கள். ஆனால் கமல் 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அவ்வை சண்முகி திரைப்படத்தில் படம் முழுக்க பெண் வேடத்தில் நடித்திருப்பார்.

பெண் வேடமிட்டு நடித்ததோடு மட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு பின்னணி குரலும் கொடுத்து, பாட்டும் பாடி இருப்பார் கமல்ஹாசன். இந்த படத்தை இயக்குனர் கேஸ் ரவிக்குமார் இயக்க, தயாரிப்பாளர் ஆர் கே ஹரி தயாரித்திருந்தார். கமலஹாசன் இந்த படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் ஒன்றரை கோடி சம்பளமாக கேட்டிருக்கிறார். அப்படி தர முடியவில்லை என்றால் குறிப்பிட்ட நான்கு ஏரியாக்களின் தியேட்டர் உரிமையை தனக்கு தர வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

Also Read: 50 வருடத்திற்கு முன்னதாகவே இயேசுவாக நடித்துள்ள கமல்.. ரத்தம் சொட்ட சொட்ட அச்சு அசல் அதே போல இருக்கிறாரே!

அந்த காலத்தில் ஒன்றரை கோடி என்பது மிகப்பெரிய தொகை என்பதால் அதை சம்பளமாக கொடுப்பதற்கு விருப்பமில்லாத தயாரிப்பாளர் என்ன செய்வதென்று தெரியாமல் நான்கு ஏரியாக்களின் தியேட்டர் உரிமையை கமலஹாசனுக்கு கொடுப்பதற்கு சரி என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த இடத்தில் தான் தயாரிப்பாளர் உலகநாயகன் கமலஹாசனை தவறாக கணக்குப் போட்டு இருக்கிறார்.

கமலஹாசன் கேட்ட நான்கு ஏரியாக்களில் அவ்வை சண்முகி சுமார் ஐந்து கோடி வசூல் செய்து கொடுத்திருக்கிறது. அதாவது கமல் இந்த வியாபாரத்தின் மூலம், கேட்ட சம்பளத்தை விட நான்கு மடங்கு லாபம் பார்த்து விட்டார். இதற்கு 1.5 கோடி சம்பளத்தையே கொடுத்திருக்கலாம் என்று பின்னர் யோசித்தாராம் படத்தின் தயாரிப்பாளர். ஆனால் வசூல் இப்படித்தான் இருக்கும் என்பதே முன்னதாகவே கணித்து ராஜதந்திரமாக செயல்பட்டு இருக்கிறார் உலகநாயகன்.

Also Read: பணம் சம்பாதிக்க தான் வந்திருக்கேன்.. நெல்சனுக்கு பதிலடி கொடுத்த கமல்!

Trending News