ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முதல் காதலியை இழந்த கமல்.. காதலில் ஆரம்பித்து மாமியாராக முடிந்த கதை

Actor Kamal love story: “உன் போலவே உள்ள நடிகன், ஊர் எங்கிலும் இல்லை ஒருவன்..! நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டுகொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே” வலியை ஏற்படுத்தும் இந்த வாலியின் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சகலகலா வல்லவனுக்கு பொருந்தும்.

தமிழ் சினிமாவின் அடையாளமாய் திகழும் உலகநாயகன் கமல் அவர்களிடம் காதலுக்கும் பஞ்சமில்லை காதலிக்கும் பஞ்சமில்லை. காதல் ஆனது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறும் கமலஹாசன் அவர்களின் வாழ்க்கையில் கடந்த பெண்களோ ஏராளம்.

மலையாளம் தமிழ் போன்றவற்றில் நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வந்தவர் ஸ்ரீவித்யா. கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வராகங்கள்” படத்தில்  கமல் மற்றும் ஸ்ரீவித்யா காதலர்களாக நடிக்கவில்லை வாழ்ந்தார்கள் என்றும் சொல்லும் அளவுக்கு இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளாத ஸ்ரீவித்யாவின் தாய் கமலை கண்டிக்கவே, கமல் கோபப்பட்டு பேசாமல் போய்விட்டார் என்று ஸ்ரீவித்யாவே கூறினார்.

Also read : குருவிற்கு கூட நன்றி கடன் செலுத்த முதுகு எலும்பு இல்லாத கமல்.. இந்த விஷயத்தில் ரஜினி எவ்வளவோ பரவாயில்ல!

ஒரு தலையாக காதலின் வலியோடு துடித்துக் கொண்டிருந்த ஸ்ரீவித்யாவிற்கு கமல் மற்றும் வாணி கணபதி இன் திருமணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குப் பின் தான் உடைந்து போனதாக அவரே பேட்டிகளில் கூறியுள்ளார்.

இத்தகைய கொடூரமான வலியின் பின்னும் இருவரும் புன்னகை மன்னனில் ஒன்றாக இணைந்தார்கள். மீண்டும் அபூர்வ சகோதரர்களின் கமலின் அம்மாவாகவும் காதலா காதலாவில் கமலுக்கு மாமியாராகவும் நடிக்க வைத்தது கொடூரத்தின் உச்சம். கலைக்காக என்று கூறினாலும் ஸ்ரீவித்யா அவர்கள் வலிக்காமல் எத்தனை நாள் நடித்திருப்பார்.

நட்புடனும் நடிப்புடனும் பழகி வந்த நிலையில் கமலுக்கு சரிகா, கௌதமி என வாழ்க்கை துணைவிகள் மாறிக்கொண்டே இருந்தனர். இந்நிலையில் 2006 இல் புற்றுநோயின் தீவிரத்தால் தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கிய ஸ்ரீவித்யாவை கமல் நேரில் சென்று கண்டதாகவும் அவரின் வருகைக்கு பின்னே ஸ்ரீவித்யாவின் உயிர் பிரிந்ததாகவும் தகவல். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்று புனிதப்படுத்தி விடுவார் கமல்.

Also read : எல்லா காதலும் கல்யாணத்துல முடியனுங்கற அவசியம் இல்ல.. 19 வயதில் கமல் காதலித்த நடிகை

Trending News