பாடி பில்டிங்கில் 7 முறை மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றவர் காமராஜ். எல்லாராலும் பாடிபில்டராக முடியாது எனவும் அதற்கான தனித்தனி ட்ரைனிங் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உண்மையில் அவர் ஒரு சாப்பாட்டு பிரியர். ஆனால் உடற்பயிற்சி போட்டி வந்தால் அப்படியே சாப்பாடு எல்லாத்தையும் ஓரங்கட்டி விடுவாராம். தமிழ் சினிமாவில் இவர் ஐ படத்தில் கூட பாடிபில்டராக நடித்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் போட்டிக்கு 20 நாட்களுக்கு முன்னாடியே உணவில் உப்பு போன்றவற்றை எதுவுமே சேர்த்துக் கொள்ளாமல் உடற்பயிற்சி மட்டுமே கவனம் செலுத்தி வருவாராம். உடற்பயிற்சி போட்டி மேடை ஏறுவதற்கு முன்பு 36 மணி நேரம் எந்த ஒரு சாப்பாடு சாப்பிடாமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பாராம்.
பாடிபில்டிங் பண்ணுவதற்கு நேரம் காலமே கிடையாது. அதனால் கிடைக்கிற நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம் எனவும் கூறியுள்ளார். உடற்பயிற்சி செய்வதற்கு மாதம் குறைந்தது 30, 40 ஆயிரம் செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.
தற்போது நிறைய பேருக்கு ஸ்பான்சர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது இவருக்கும் கூட ஒரு சில ஸ்பான்சர் வாய்ப்புகள் வருவதில்லை எனவும் கூறியுள்ளார்