செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தமிழ் சினிமாவில் கார்த்தியின் 2 சாதனையை முறியடிக்க முடியாமல் திணறும் நடிகர்கள்.. 13 வருஷமா அப்படியே இருக்கு!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். இப்படத்தில் கார்த்தி நடிப்பை பார்த்தால் அறிமுக நாயகனாக நடிப்பு போல் இல்லாமல் சிறந்த நடிகர் நடித்தது போல் இருக்கும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கார்த்திக்.

வடிவேலு ஒரு படத்தில் “ஒரு தடவை யூஸ் பண்ண பொருளை மறுபடியும் யூஸ் பண்ண மாட்டாங்க” எனக் கூறுவார். இந்த வசனத்திற்கு ஏற்ப தற்போது கார்த்தி சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறார்.

கார்த்திக் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துள்ளார். ஆனால் அந்த 20 படங்களிலும் புதிய இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்த சாதனையை இதுவரை காப்பாற்றிய வந்த கார்த்திக் தற்போது அவரே இதனை முறியடித்துள்ளார்.

காற்று வெளியிடை படத்தில் மணிரத்னத்துடன் பணியாற்றியுள்ளார் கார்த்திக். தற்போது மீண்டும் அதே இயக்குனருடன் பொன்னியின் செல்வன் படத்தில்பணியாற்றி வருகிறார்.

மற்றொரு சாதனை என்னவென்றால் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதுவரை எந்த ஒரு அறிமுக நாயகனின் முதல் படம் 300 நாட்களுக்கு மேல் ஓடிய தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தியின் இந்த சாதனை முறியடிக்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

paruthiveeran-karthi-cinemapettai
paruthiveeran-karthi-cinemapettai

Trending News