திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கார்த்தியின் கைவசம் இருக்கும் 5 மெகா பட்ஜெட் படங்கள்.. அண்ணனை மிஞ்சிய தம்பி

Karthi Lineup Movies: நடிகர் கார்த்திக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆன பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்திற்கு பிறகு அவர் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். நடிகர் சூர்யாவிற்கு அடுத்தடுத்து கங்குவா, வாடிவாசல், இயக்குனர் சுதா கொங்கராவுடன் புதிய படம் என வரிசை கட்டி அப்டேட் இருக்கும் பொழுது, கார்த்தி அண்ணனை மிஞ்சிய தம்பியாக கைவசம் 5 மெகா பட்ஜெட் படங்களை வைத்திருக்கிறார்.

கார்த்தி 25: பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான கார்த்திக்கு 25வது படம் ஜப்பான். இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் எழுதி, இயக்கியிருக்கிறார். நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அணு இம்மானுவேல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

Also Read:ரீ-ரிலீஸ் செய்து வசூலை வாரி குவித்த சூர்யாவின் வாரணம் ஆயிரம்.. களத்தில் தீயாய் நிற்கும் சுப்ரமணியபுரம்

கார்த்தி 26: நடிகர் கார்த்தி தன்னுடைய 26 வது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி உடன் இணைகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் கார்த்தியின் 26 ஆவது படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க இருக்கிறார். படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் போடப்பட்டது.

கார்த்தி 27: 96 என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தான் இயக்குனர் பிரேம்குமார். கார்த்தி தன்னுடைய 27 ஆவது படத்தில் பிரேம்குமார் உடன் இணைகிறார். 96 போன்ற காதல் படத்தை கொடுத்த பிரேம்குமாரின் காம்போவில் கண்டிப்பாக ஒரு நல்ல காதல் கதையை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

Also Read:கங்குவா-விற்கு முன் சூப்பர் ஹிட் படத்தை வைத்து வசூலை அள்ளும் சூர்யா.. 500 தியேட்டர்களில் ரீ ரிலீஸ்

கார்த்தி 28: நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சர்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தயாராகி விட்டதாக இயக்குனர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

கார்த்தி 29: நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் என்றால் அது கைதி 2 தான். இந்த படம் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தை வைத்து இயக்கும் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு கைதி 2 வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:சூர்யாவிற்கு அப்பாவாக நடிக்கும் கேஜிஎப் வில்லன்.. ஆர்டிஸ்ட் செலக்ஷனிலேயே பகீர் காட்டும் கங்குவா

Trending News