செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஓவர் மமதையில் வந்த வாய்ப்பை தட்டிவிட்ட கார்த்தி.. உள்ளதும் போன பரிதாபம்

Actor Karthi: சில ஹீரோக்களுக்கு தொடர்ந்து இரண்டு மூன்று படங்கள் ஹிட்டாகி விட்டால் இனி நாம் தான் என்ற மமதை கொஞ்சம் ஏறிவிடும். அப்படித்தான் நடிகர் கார்த்திக்கும் ஏறி இருக்கிறது. இனி மொத்தமாக எல்லாமே வெற்றி தான் என நினைத்துக் கொண்டு அவர் ஒரு மிகப்பெரிய படத்தின் வாய்ப்பை உதறித் தள்ளி விட்டு இப்போது பீல் பண்ணி கொண்டு இருக்கிறார்.

கார்த்தி குறுகிய வருடங்களிலேயே தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் வரிசையில் வந்தவர். சூர்யா பல வருடங்களாக கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியை, கார்த்தி ஒரு சில படங்களின் மூலமே பெற்றுவிட்டார். பருத்திவீரன் மற்றும் கொம்பன் போன்ற படங்கள் கார்த்தியை தென் தமிழக மக்களிடம் அதிகமாக கொண்டு சேர்த்ததால், இன்று வரை அவர் அந்த மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Also Read:கார்த்தி, ஆர்யாவை கழட்டிவிட்டு, பையா 2-விற்கு பிரபல வாரிசு நடிகரின் மகனை களம் இறக்கும் லிங்குசாமி

உண்மையில் நடிகர் கார்த்திக்கு 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கைதி படத்திற்கு பிறகு பெரிய ஹிட் படங்கள் எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்று இருந்தாலும், அதில் ஜெயம் ரவி மற்றும் விக்ரமும் முக்கிய ரோலில் நடித்திருந்தார்கள். அதன்பின்னர் வெளியான சர்தார் திரைப்படம் ஒரு டீசன்டான வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

படு தோல்வி அடைந்த ஜப்பான் படம்

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜப்பான் படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து விட்டது. கார்த்தியின் 25 ஆவது படம் என அதிக எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. கடைசியில் மண்ணை கவ்வியது தான் மிச்சம். கைதி, பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை நம்பி கார்த்தி அவரை தேடி வந்த பையா 2 படத்தின் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்.

பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியால் நகரத்து இளைஞனாகவும் நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு காட்டிய படம் பையா. அதிரடி ஆக்சன், காதல் ரொமான்ஸ் தன்னை ஒரு ஹீரோ மெட்டீரியல் ஆக கார்த்தி அந்த படத்தின் நிரூபித்து காட்டினார். லிங்குசாமி அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முதலில் கார்த்தியை தான் அணுகினார்.

ஆனால் கார்த்தி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது பையா 2 படத்தில் நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்க இருக்கிறார். ஜப்பான் படம் தோல்வி அடைந்த நிலையில் ஒருவேளை கார்த்தி கையில் பையா 2 படம் இருந்திருந்தால் கண்டிப்பாக அது அவருக்கு ஒரு மாஸ் என்ட்ரி ஆக அமைந்திருக்கலாம்.

Also Read:லிங்குசாமி எடுக்கப்போகும் மறுபிரவேசம்.. வாய்ப்பு கொடுத்த அந்த 2 ஹீரோக்கள்

Trending News