திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சைலன்டாக சம்பவம் பண்ணும் கார்த்தி.. அடேங்கப்பா கைவசம் இத்தனை படங்களா?

Actor Karthi Upcoming Movies: ஒரு சில ஹீரோக்கள் ஒரு படம் ஒப்பந்தம் ஆனாலே ஊரைக் கூட்டி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் போது, சைலன்ட் ஆக சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி. இவருடைய கைவசம் அடுத்தடுத்து இருக்கும் படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. எத்தனை படங்களை கையில் வைத்துக் கொண்டால் எதுவும் நடக்காதது போல் அமைதியாக இருக்கிறார் கார்த்தி என வியக்க வைத்திருக்கிறது. கார்த்தியின் கைவசம் இருக்கும் படங்களை பார்க்கலாம்.

ஜப்பான்: குக்கூ, ஜோக்கர் போன்ற விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகனுடன் இணைந்து கார்த்தி நடிக்கும் படம் தான் ஜப்பான். இந்தப் படத்தை தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது.

Also Read:கோலிவுட்டில் மீண்டும் ஒரு அண்ணன், தம்பி காம்போ.. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்

கார்த்தி 26: கார்த்தி தன்னுடைய 26 ஆவது படத்தில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா படங்களுக்கு ட்ரிபியூட் கொடுப்பது போல் இந்தப் படத்தை எடுக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

கார்த்தி 27: 96 படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை கொண்டு வந்தவர் தான் இயக்குனர் பிரேம்குமார். இவர்தான் கார்த்தியின் 27 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் நல்ல ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார் 2: இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி 100 கோடி வசூல் வேட்டை ஆடிய படம் தான் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

Also Read:மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

கைதி 2: நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்றால் அது கைதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடி ஆகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என சொல்லி இருக்கிறார்.

கார்த்தி-சதிஷ் செல்வகுமார்: நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை வைத்து பேச்சிலர் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் சதிஷ் செல்வகுமார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி இவருடைய இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

கார்த்தி – அருண் ராஜா காமராஜ்: கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அருண் ராஜா காமராஜ். இவரும் கார்த்திக்கு கதை சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த படத்தின் அப்டேட் வெளியாகும்.

Also Read:பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

Trending News