செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கோலிவுட்டில் மீண்டும் ஒரு அண்ணன், தம்பி காம்போ.. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்

Actor Karthi: சினிமா ரசிகர்கள் பொதுவாக ஒரு காம்போவை ரொம்பவும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அட இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடித்த நல்லா இருக்குமே என நினைத்த கூட்டணி நிறைய உண்டு. இதில் ஒரு சில கூட்டணி ரசிகர்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல் நடந்து விடும். ஒரு சில கூட்டணி மட்டும் விருப்பமாகவே கடைசிவரையும் இருந்து விடும்.

அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அண்ணன் தம்பி கூட்டணி தான் கார்த்தி மற்றும் சூர்யா. கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி ஹீரோவாக அறிமுகமாகியதிலிருந்து அவருடைய அண்ணன் சூர்யாவுடன் படம் பண்ண வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இப்போது இந்த காம்போ பற்றி கார்த்தி ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

Also Read:மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

சினிமாவை பொறுத்த வரைக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் களம் இறங்கினால் அதில் ஒருவர் ஜெயிப்பார், ஒருவர் கொஞ்சம் தட்டு தடுமாறத்தான் செய்வார். ஆனால் சூர்யா மற்றும் கார்த்தி தான் அந்த இலக்கணத்தை மாற்றி இரண்டு பேருமே வெற்றி ஹீரோக்களாக இருக்கிறார்கள். சூர்யா சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் கழித்து கார்த்தி வந்திருந்தாலும் இப்போது அவருக்கு இணையாக முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்துவிட்டார். அதேபோல் தன்னுடைய அண்ணி ஜோதிகா உடனும் தம்பி படத்தில் இணைந்து நடித்து விட்டார். இப்போது சூர்யாவுடன் இணைந்து படம் பண்ண இருப்பதாக சூப்பர் அப்டேட்டை கொடுத்து இருக்கிறார் கார்த்தி. இருவரும் சேர்ந்து படம் பண்ணினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தில் தான் நாங்கள் இருவரும் சேரவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

Also Read:பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

இப்போது அந்த பயம் இல்லை என்றும், இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து விட்டதாகவும், விரைவில் அதற்கான வேலைகள் நடைபெறும் என்றும் கார்த்தி சொல்லி இருக்கிறார். இவருக்கும் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால், இது எல்லாம் முடிந்த பிறகு இந்த காம்போவின் கண்டிப்பாக ஒரு படம் வரும் என்பது மற்றும் உறுதியாக தெரிகிறது.

மேலும் பேசிய கார்த்தி, முதலில் இயக்குனராக வேண்டும் என்று தான் சினிமாவை தேர்ந்தெடுத்ததாகவும், ஹீரோ வாய்ப்பு வரும் பொழுது அவருடைய அப்பா சிவகுமார் நீ எந்த வயதில் வேண்டுமானாலும் இயக்குனராகலாம், ஆனால் ஹீரோ ஆவதற்கு என்று ஒரு வயது இருக்கிறது இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை கைவிட்டு விடாதே என்று சொல்லி தன்னை ஹீரோவாக்கினார் என்றும் சொல்லியிருக்கிறார்.

Also Read:ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

Trending News