செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அதிக ஹைப் கொடுத்து பிளாப்பான கெட்டப் சேஞ் படங்கள்… தோல்வி பயத்தில் கார்த்தி

சினிமாவை பொறுத்தவரை அவ்வப்போது பல புதிய முயற்சிகளை கொண்டு வருவார்கள். மேலும் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் என்பது எப்போதுமே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் ஹீரோ எந்த கெட்டப்பில் இருக்கிறார் என்பதை பார்க்கவே. சிலர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வைத்தே கதையை சொல்லி விடுவார்கள்.

நடிகர்கள் சிலர் ஒரு படத்திலேயே பல கெட்டப்புகளில் வருவார்கள். இதுபோன்ற முயற்சிகளை தமிழ் சினிமாவில் கமல், அஜித், விக்ரம், சூர்யா போன்றவர்கள் அதிகமாக எடுப்பார்கள். உலக நாயகன் கமலஹாசன் தசாவதாரம் என்னும் ஒரு படத்தில் பத்து கெட்டப்புகளில் நடித்திருப்பார்.

Also Read: 2 படத்துகுமே வரும் ஆப்பு.. வெடிக்க ஆரம்பித்தது தீபாவளி வேட்டு

நடிகர் கார்த்தியும் இது போன்ற கெட்டப் சேஞ் முயற்சியை தான் தன்னுடைய சர்தார் படத்தில் எடுத்திருக்கிறார். இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராசி கண்ணா, ராஜீஷா விஜயன், லைலா, இளவரசு, முரளி சர்மா, முனீஷ்காந்த் ராமதாஸ் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். நாட்டின் ரகசிய ஒற்றனாக அப்பா கார்த்தியும், போலீசாக மகன் கார்த்தியும் என இரட்டை வேடங்கள். இந்த படத்தில் கார்த்தி நிறைய கெட்டப் சேஞ் லுக்கில் வந்திருக்கிறார். இது கார்த்தி ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Also Read: சர்தார் படத்தின் கதையை உளறிய கார்த்தி.. போற போக்குல சிவகார்த்திகேயனை சீண்டி விட்ட சம்பவம்

ஆனால் சர்தார் திரைப்படம் கார்த்திக்கு கத்தியின் மேல் நடக்கும் நிலை தான். இதற்கு காரணம் ஒரு படத்தில் ஹீரோ அதிக கெட்டப் சேஞ் லுக்கில் வருகிறார் என்றால், தானாகவே அந்த படத்திற்கு அதிக ஹைப் வந்துவிடும். அந்த ஹைப்பை படத்தின் கதை பூர்த்தி செய்யவில்லையென்றால் படம் தோல்வி தான்.

சிட்டிசன் படத்தில் நடிகர் அஜித் நிறைய கெட்டப்புகளில் வருவார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. கமல் இதுவரை யாரும் எடுக்காத முயற்சியாக ஒரே படத்தில் 10 வேடங்களில் நடித்தார் அந்த படம் பிளாப் ஆனது. இப்போது இந்த பயம் தான் கார்த்திக்கு வந்து இருக்கிறது. சர்தார் படம் தோல்வியா, வெற்றியா என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.

Also Read: 16 வருடத்திற்கு பின் அதே அழகுடன் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை.. சர்தார் படத்தில் கலக்கும் சிரிப்பழகி

Trending News