புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பல நடிகைகளை பதம் பார்த்த நவரச நாயகன்.. நாக்கில் நரம்பில்லாமல் பேசிய பிரபலம்

பத்திரிக்கையாளர்கள் என்றாலே ஒருவரின் மனம் கோணாதபடி இலைமறை காயாக ஒரு விஷயத்தைச் சொல்வதுதான் சரி. ஆனால் சமீபகாலமாக அப்படி இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைச் சொல்கிறேன் என்று அவர்களை மிகவும் தரக்குறைவாகவும் மட்டமாகவும் பேசி வருகின்றனர். கேட்டால் ஒரு செய்தியின் சுவாரஸ்யம் கருதி மிகைப்படுத்தி சொல்கிறேன் எனவும் கூறுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் மிக மிக முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக பத்திரிக்கையாளராக இருக்கும் அவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள பல நடிகர் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை தெரிந்து வைத்துள்ளதாக கூறுகிறார்.

இதன் காரணமாக தற்போது பல யூடியூப் சேனல்கள் அவரை வைத்து நடிகர் நடிகைகளின் இல்லற விஷயங்களையும் ரகசிய விஷயங்களையும் ஒளிபரப்பி நன்றாக கல்லா கட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய வீடியோ ஒன்றில் நவரச நாயகன் கார்த்திக் பற்றி ஒரு மோசமான தகவலை பகிர்ந்துள்ளார்.

bailwan-ranganathan-cinemapettai
bailwan-ranganathan-cinemapettai

அதாவது கார்த்திக் தன்னுடன் நடித்த பல நடிகைகளை பதம் பார்த்துள்ளார் என கொஞ்சமும் நம்பகத்தன்மை இல்லாத செய்தியை குறிப்பிட்டுள்ளார். பதம் பார்த்துள்ளார் என்றாலே புரிந்து கொள்ள வேண்டியதுதான். பல நடிகைகளுடன் அப்படி இப்படி இருந்துள்ளார் என்பதை கூறியுள்ளார். ஆனால் கோலிவுட் வட்டாரங்களில், குறித்த நேரத்திற்கு கார்த்தி படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளர்களை தொந்தரவு செய்வாரே தவிர நடிகைகளிடம் இப்படி இருந்ததே இல்லை எனக் கூறுகின்றனர்.

karthik-cinemapettai
karthik-cinemapettai

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் நடிகைகள் கூட நல்லவர்கள் இல்லை என்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் அனைத்து வீடியோக்களையும் தெரிவித்து வருவது அவர்மீதான மரியாதையை குறைத்து வருகிறது.

Trending News