Kiss Teaser: வளர்ந்து வரும் ஹீரோவாக கவனம் பெற்றுள்ள கவின் நடிப்பில் கிஸ் படம் உருவாகி இருக்கிறது. சதீஷ் இயக்கத்தில் ப்ரீத்தி அஸ்ராணி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்றது போல் டீசரின் ஆரம்பமே லவ் ஜோடியின் கிஸ்ஸில் ஆரம்பிக்கிறது. ஆனால் கவின் இதற்கு எதிரானவராக இருக்கிறார்.
எந்த ஜோடி காதலித்தாலும் கட்டையை போட்டு விடுகிறார். அதே போல் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று கண்டன கடையடைப்பு என்று சொல்லும் அளவுக்கு அவர் இருக்கிறார்.
கவினின் கிஸ் டீசர் எப்படி இருக்கு.?
இதிலிருந்து காதலுக்கும் அவருக்கும் வெகுதூரம் என்பது தெரிகிறது. ஆனால் டீசரின் இறுதியில் ஹீரோயின் உன்னுடைய முதல் கிஸ் பற்றி சொல் என்கிறார்.
அதற்கு கவின் எதிர்பாராத ரியாக்ஷன் கொடுப்பது போல் டீசர் முடிகிறது. இப்படியாக வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷலாக வெளிவந்துள்ள டீசருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே லிப்ட், டாடா, ஸ்டார் என முன்னேறி வரும் கவினுக்கு இந்த படமும் வெற்றியடையும் என ரசிகர்கள் டீசரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.