திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு ஸ்டாரால் மற்றொரு ஸ்டாரின் வாய்ப்பை இழந்த கவின்.. திருப்பி அடிக்கும் கர்மா!

Actor Kavin upcoming movies and his missed out on Blue Star movie: லிப்ட் மற்றும் டாடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார் கவின். ஆரம்பத்தில் கிடைக்கும் கேரக்டர்களை திறம்பட செய்தவர். கல்லூரி கதை மூலம் விஜய் டிவியில் பிரபலமானார் பின்பு நடைபெற்ற பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு தமிழக மக்களின் அபிமானத்தைப் பெற்ற கவின் வெள்ளி திரையில் ஜொலிக்கலானார்.

கொஞ்சமா பேசி நிறைவான கைத்தட்டல்களை வாங்கிய படம் கவினின் டாடா, ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் பாராட்டி தள்ளிய உற்சாகத்தில் இருந்தார் கவின். இப்படத்திற்கு பின் கவினின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது எனலாம். தற்போது இவர் நடிப்பில் உருவாக உள்ள படங்களை பற்றி காணலாம்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பியார் பிரேமா காதல் இயக்கிய இளனுடன் ஸ்டார் படத்தில் இணைந்துள்ளார் கவின். இப்படத்தில் முதலில் கவினுக்கு முன்பாக ஹரிஷ் கல்யாண் கமிட் ஆகி இருந்தார். பல்வேறு காரணங்களால் அவர் விலகவே கவின் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம் பிப்ரவரியில் காதலர் தினத்தை ஒட்டி திரைக்கு வர உள்ளது.

Also read: ஒன்னு ரெண்டு படங்கள் ஹிட்டானதால் மெதப்பில் சுற்றும் கவின்.. இப்படியே போனா தூங்கு மூஞ்சி கெதி தான்

அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் அறிமுக இயக்கத்தில் கவின் இணைய உள்ள படத்தின் தலைப்பு கிஸ். கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட புகழ் ப்ரீத்தி அஸ்ராணி டஃப் கொடுக்க வருகிறார். இப்படத்திற்கு இசை அனிருத். இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டமாக  கவினின் கிஸ் திரைப்படம் ரிலீசாக உள்ளது. படங்களைத் தவிர ஆகாச வாணி என்ற வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் கவின்.

சமீபத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கி அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த கதையை இயக்குனர் ஜெயக்குமார் முதலில் அசோக் செல்வன் கேரக்டருக்கு கவின் இடம் தான் சொன்னாராம். படத்தின் கதை பிடித்து போக பல தயாரிப்பாளர்களிடம் ஜெயக்குமாரை அறிமுகமுகப்படுத்தியதே கவின் தானாம்.

கவின் “ஸ்டார்” படத்தில் ரொம்ப பிசியா இருந்து கால்ஷீட் கொடுக்க முடியாததுனால அந்த வாய்ப்பை இழந்துவிட்டாராம். இந்த படத்தில் இவர் தான் நடிக்க வேண்டும் என்பது இறைவன் எழுதிய ஸ்கிரிப்டோ என்னவோ? ஹரீஷ் கல்யாண் நடிக்க வேண்டியது கவின் நடிக்கிறார்! கவின் நடிக்க வேண்டியத அசோக் செல்வன் தட்டிட்டு போனாரு! விதி வலியது! வேற என்னத்த சொல்ல!

Also read: திருப்பதியில் இருந்து துரத்தி விடப்பட்ட தனுஷ் படப்பிடிப்பு.. விசுவாசிகள் செய்த வேலையால் வந்த விளைவு

Trending News