திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நடிப்பிலும் ஒரு கை பார்க்கப்போகும் லோகேஷ் கனகராஜ்.. வெளிவந்த சிம்பு பட அப்டேட்

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்த அவரது நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் படகுழுவினருக்கு பரிசை வாரி வழங்கினார்.

இந்த சூழலில் சிம்புவின் கொரோனா குமார் படம் அறிவிப்பு வெளியான பிறகு எந்த படப்பிடிப்பும் தொடங்கவில்லை. இவ்வாறு தாமதமாகி கொண்டே இருப்பதால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கொரோனா குமார் படத்தின் இயக்குனர் கோகுல் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

Also Read : சிம்புவை திட்ட சொன்னாங்க.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை ராதிகா

அதாவது தற்போது ஆர் ஜே பாலாஜியை கதாநாயகனாக வைத்த சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார்.இந்த படம் படத்தையும் ஐசாரி கணேஷ் தான் தயாரித்துள்ளார். இந்நிலையில் சிம்புவின் கொரோனா குமார் படத்தையும் அவர்தான் தயாரிக்க உள்ளதால் விரைவில் இப்படம் தொடங்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஆர் ஜே பாலாஜி படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கோகுல் கூறியுள்ளார். இளம் இயக்குனரான லோகேஷ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

Also Read : சிம்புக்கு பறிபோன தேசிய விருது இயக்குனரின் பட வாய்ப்பு.. ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது

இதைத்தொடர்ந்த தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார். தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகளை லோகேஷ் தேர்வு செய்து வருகிறார். இப்போது லோகேஷ் நடிகராக ஒரு படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கோகுல் கொரோனா குமார் படத்தை அடுத்ததாக இயக்க உள்ளதால் இப்படத்திலும் லோகேஷ் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிம்பு தற்போது பத்து தல படத்தை தொடர்ந்து கொரோனா குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also Read : சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

Trending News