புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அப்போதே பொன்னியின் செல்வனாக நான் தான் நடிப்பேன் என அடம் பிடித்த ஜாம்பவான்.. வந்தியத்தேவனையும் செலக்ட் செய்த நடிகர்

கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன், பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் கொண்டு உருவான சோழ பேரரசை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று புதினம். பொன்னியின் செல்வன் பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகங்களாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

ஆகையால்  எம்ஜிஆர் முதல் கமலஹாசன் வரை பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக தயாரிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. எம்ஜிஆர், சிவாஜியின் நன்மதிப்பை பெற்ற நடிகர்களுள் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன்.

Also Read: 500 கோடி வசூலுக்கு தயாராகும் 3 படங்கள்.. பொன்னியின் செல்வன் போல் உச்சகட்ட எதிர்பார்ப்பில் கோலிவுட்

எம்ஜிஆரால் நடிக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் தனது சொந்த தயாரிப்பில் தயாரிப்பதாக இருந்தது. இதில் வந்திய தேவனாக கமலையும், குந்தவையாக ஸ்ரீதேவியையும் இயக்குனர் பாரதிராஜாவையும் கொண்டு பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திட்டமிடப்பட்டது.

ஏதோ சில காரணங்களால் பொன்னியின் செல்வன் திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது. இப்பொழுது பல்வேறு தடைகளைத் தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக பொன்னியின் செல்வன் வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

Also Read: 14 வருடம் கழித்து தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய விஜய்.. கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு அள்ளிக் கொடுத்த தளபதி!

பொன்னியின் செல்வன் திரைப்படம் பல்வேறு கதாபாத்திரங்கள் கொண்டுள்ளது . 500 கோடி பொருள் செலவில் மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வந்திய தேவனாக கார்த்தி அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆதித்ய கரிகாலனாக விக்ரம் .

குந்தவை ஆக த்ரிஷா, நந்தினி ஆக ஐஸ்வர்யா ராய் பெரிய பழுவேட்டையாக சரத்குமார் என பெரிய நட்சத்திர பட்டாளங்களாக சேர்ந்து இத்திரைப்படத்திற்கு உயிரூட்டி உள்ளனர் . இத்திரைப்படத்திற்கு பிறகு இதில் நடித்த அனைவருக்கும் நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன . இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.

Also Read: இவர்கள் இல்லனா கல்லா கட்ட முடியாது.. அடுத்த 500 கோடி வசூலுக்கு சூழ்ச்சி செய்யும் மணிரத்தினம்

Trending News