புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பலகோடி செலவு இல்லை, பஞ்சாங்கத்தை நம்பும் இந்தியா.. வாய்விட்டு புண்ணாக்கியா மாதவன்!

தமிழ் சினிமாவில் சாக்லேட்பாய் என்ற அந்தஸ்தோடு வலம் வந்த நடிகர் மாதவன் முதன் முறையாக இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’. இந்த திரைப்படத்தை அவரே தயாரிக்கிறார். இந்தப்படத்தில் மாதவனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சூர்யா, சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு, படத்தை வரும் ஜூன் 1-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக மாதவன் எடுத்திருக்கிறார். படத்தின் புரமோஷனுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார் மாதவன்.

முதல்முறையாக சென்னையில் தான் இந்த படத்தை பற்றி பேசுகையில், செவ்வாய் கிரகத்திற்கு பல நாடுகள் பல கோடிகளை செலவு செய்து முப்பத்தி இரண்டாவது முறைக்கு மேல் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். ஆனால் இந்தியா சிறிய இன்ஜினை வைத்து பஞ்சாங்கத்தின் உதவியால் எளிதாக வெற்றி அடைந்தனர்.

இந்த கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்து இப்போது இருக்கும் கோள்களை எப்படி கணிக்க முடியும்.

இப்போது உள்ள காலநிலை, சூழ்நிலை, கோள்களின் மாற்றங்களை வைத்து, எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், எப்படி செல்ல வேண்டும் என்று கணித்து ராக்கெட்டை அனுப்புகிறோம். மாதவன் சொல்வதுபோல் பஞ்சாங்கம் வைத்து அனுப்புவது இல்லை என்று மயில்சாமி அண்ணாதுரை கூறியிருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் மாதவன் பெயரை கெடுக்கும் விதங்களில் அமைந்துள்ளது.

Trending News