செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

6 மாத குழந்தை அதியமானை அறிமுகப்படுத்திய மகத்.. செம க்யூட்டான பேபி

வல்லவன், காளை, ஜில்லா உள்ளிட்ட படங்களில் சிறு கேரக்டரில் நடித்தவர் நடிகர் மகத் ராகவேந்திரா. இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒழுங்காக இருந்த மஹத் போகபோக ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதற்கு அவர் நடிகை மும்தாஜை ஏக வசனத்தில் பேசியது ஒரு காரணமாக இருந்தது.

அதன் பிறகு மஹத் தனது நீண்ட நாள் காதலியான பிராச்சி மிஸ்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த உடன் எடுத்த சில எமோஷனல் புகைப்படங்களை மகத் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்களுக்கு பல லைக்குகள் வந்தன. மேலும் குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என்ற தமிழ் பெயரை அவர் வைத்ததற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தற்போது இந்த தம்பதிகளின் மகனுக்கு ஆறு மாதம் ஆகிறது. அதை தெரிவிக்கும் பொருட்டு மகத் தன் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் குழந்தை வெள்ளை நிற துணியால் சுற்றப்பட்டு கொள்ளை அழகுடன் இருக்கிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

அதில் முதல் ஆளாக நடிகை யாஷிகா ஆனந்த் குழந்தை க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் கொடுத்துள்ளார். அவர் மகத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து ராய் லக்ஷ்மி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

adhiyaman
adhiyaman

Trending News