வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அழகைவிட தன்னடக்கம் ரொம்ப முக்கியம்.. அவரைப் பார்த்து கத்துக்கோங்க கோமாளி அஷ்வின்

தற்போது மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், கருத்துக்களையும், பாராட்டையும் பெற்று வரும் திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பையும் தாண்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியவர் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மணிகண்டன்.

இவர் விக்ரம் வேதா, காலா, 8 தோட்டாக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விசுவாசம், தம்பி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இதுதவிர மிமிக்ரி, டப்பிங் ஆர்டிஸ்ட் என்று பல திறமைகளை இவர் கொண்டுள்ளார்.

இவர் ஒரு விழாவின் போது மேடையில் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த விழாவில் அவர் எந்த ஆடம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக கலந்து கொண்டுள்ளார். ரஜினி, சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த எந்த பந்தாவும் இல்லாமல் மிக அமைதியாக பேசியுள்ளார்.

மேலும் தான் இந்த நிலைக்கு வருவதற்கு காரணமாக இருந்த அத்தனை பேரின் பெயரையும் கூறி நன்றி தெரிவித்தார். அவர் பேச்சில் இருந்த பணிவும், அடக்கமும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திரையில் சாதிப்பதற்கு ஒருவருக்கு தன்னடக்கம் ரொம்பவே முக்கியம்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின் பாடல் வெளியீட்டு விழாவில் மேடையில் ரொம்பவும் திமிராகப் பேசினார். தனக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் என்ற மிதப்பில் அவர் ஓவராக பேசியிருந்தார்.

அவரின் அந்த ஓவர் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது. இதனால் அஸ்வின் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வீடியோவிலும் கூட தனக்கு எதிராக சிலர் வேலை செய்வதாக கூறி தான் பேசியதை நியாயப்படுத்த முயன்றிருந்தார்.

இப்போது மணிகண்டன் பேசியுள்ள இந்த பேச்சை அஸ்வினுடன் ஒப்பிட்டுப் பார்த்த ரசிகர்கள் அவரை மேலும் கழுவி ஊற்றுகின்றனர். தன்னடக்கத்துடன் பேசிய மணிகண்டனுக்கு தங்கள் வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிக்கின்றனர்.

சினிமாவில் வெறும் அழகை வைத்து மட்டுமே காலம் தள்ள முடியாது. திறமையும், அடக்கமும் இருந்தால் அழகில்லாத எவரும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு மணிகண்டன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அஸ்வின் அதை புரிந்து கொண்டு நடந்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

Trending News