நடிகர் to எந்திரன் டூப், மிஸ் யூ சிட்டி.. மனோஜ் கடந்து வந்த பாதை

manoj-actor
manoj-actor

Manoj Bharathiraja: நேற்று காலையிலேயே கராத்தே மாஸ்டர் உசைனி உயிரிழந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதற்கு அனைவரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்து வந்தனர்.

அந்த சோகம் மறைவதற்கு முன்பே மாலை யாரும் எதிர்பாராத ஒரு செய்தி இடியாக வந்தது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் 48 வயதில் உயிர் நீத்துள்ளார்.

அனைவரையும் உலுக்கிய இந்த செய்தியை இப்போது வரை யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த மனோஜ்க்கு திரை பிரபலங்கள் நேரில் வந்த அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோஜ் கடந்து வந்த பாதை

இந்த நிலையில் அவர் பற்றிய பல தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது. அதில் எந்திரன் ரஜினிக்கு அவர் டூப் போட்ட விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகராக அறிமுகமான மனோஜ் சங்கர் மற்றும் மணிரத்தினம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். அப்படித்தான் எந்திரன் படத்தில் இவர் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.

அப்போது ரஜினிக்கு இவர் டூப் போட்ட போட்டோக்கள் இப்போது வைரல் ஆகி வருகிறது. இதை மிஸ் யூ சிட்டி என கனத்த இதயத்தோடு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குனர் கனவோடு இருந்த மனோஜ் கடந்த 2023 மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner