90களில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் கொடூரமான வில்லனாக காட்சியளித்த நடிகர் மன்சூர் அலிகான், அந்த காலகட்டத்தில் இருந்த முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோருடன் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து மிரள விட்டிருப்பார்.
சுமார் 250 படங்களுக்கும் மேலாக நடித்த மன்சூர் அலிகான் அரசியலிலும் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். அண்மையில் கூட நகைச்சுவை நடிகர் விவேக் இறந்ததற்கு கொரோனா தடுப்பு ஊசி போட்டது தான் காரணம் என்று பேட்டி அளித்து அதன் மூலம் பெரும் சர்ச்சையை கிளப்பிபினார்.
இதனால் மன்சூர் அலிகான் மீது ஏகப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்து திரிந்தார். அதன் பிறகு மன்சூர் அலிகான் சொன்னது தவறு தான் என்று பொது மன்னிப்பு கேட்டபிறகு அவர் மீது போட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட மன்சூர் அலிகான், தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டுள்ளார். இவர் சென்னையிலுள்ள சூளைமேடு பெரியார் பாதையில் இவருக்கென்று சொந்தமாக வீடு உள்ளது.
அந்த வீடு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அதில் கட்டப்பட்டது என்று சென்னை மாநகராட்சிக்கு வந்த தகவலின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டது.
அதை உறுதி செய்த மாநகராட்சி அதிகாரிகள் மன்சூர் அலி கான் பெயரில் உள்ள 2500 சதுர அடியில் கட்டப்பட்ட வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த தகவல் ஆனது சோசியல் மீடியாக்களில் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.