சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய் அரசியலுக்கு வந்தால் நான் என்ன பதுங்கிகொள்ளணுமா? தளபதியை தன் பாணியில் வெளுத்து விட்ட லியோ பட வில்லன்

Actor Mansoor Ali khan speak about vijay political entry: வருகிற மக்களவைத் தேர்தல் இந்தியாவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் வருகை தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. விஜய் போன்றே சர்ச்சை பேச்சுகளால் பிரபலமான வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்து உள்ளார்.

ஜனவரி 25 அன்று தளபதி விஜய் அவர்கள் மக்களவைத் தேர்தலை சந்திக்கும் பொருட்டு சென்னையை அடுத்துள்ள பனையூரில் தென் மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பதிவு செய்வது குறித்தும் பல ஆலோசனைகள் நடத்தி உள்ளார்.

அதேபோன்று குடியரசு தினத்தன்று சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து சொற்பொழிவு ஆற்ற தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். தனது அரசியல் பயணம் பற்றியும் விஜய்யின் மக்கள் இயக்கம் பற்றியும் காரசாரமாக விவாதிக்க தொடங்கினார்.

Also read: அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

போற போக்குல ஒரு சோசியல் சர்வீஸ் மாதிரி மன்சூர் அலிகான் “தமிழக தேசிய புலிகள்” என்ற கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார்.  தற்போது “தமிழக தேசிய புலிகள்”, இந்திய ஜனநாயக புலிகளாக பெயர் மாற்றம் செய்ததுடன், ‘அதிரடி அரசியல்! தடாலடி பதில்கள்! ஏழைகளின் இந்திரலோகம்! எளியவர்களை அமர வைப்போம்” என பல புதிய சிந்தனைகளுடன் சூடான தகவல்களை பகிர்ந்தார் மன்சூர் அலிகான்.

அப்பொழுது விஜய்யின் மக்கள் மன்றத்தை பற்றி மன்சூர் அலிகானிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “விஜய் தம்பி நல்லா வரணும்! என்று பாசிட்டிவாக ஆரம்பித்தவர் அவர் அரசியலுக்கு வந்தால் நான் ஓடி போய் பதுங்கி கணுமா? என தனக்குரிய ஸ்டைலில் கத்த ஆரம்பித்துவிட்டார்.

மேலும் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார் “G.O.A.T” ன்னா ஆடு தானே! பிரியாணி போட்டுட்டு போயிட்டே இருப்போம் என்பது போல் சீண்டிதுள்ளார் மன்சூர் அலிகான்.  இதைப் பார்த்த தளபதியின் ரசிகர்கள் புலி கொஞ்சம் ஓவரா ஆட்டம் போடுது. ஆட்டம் போடுற புலியை கரைக்கலாமா? வேண்டாமா? என கலாய்த்தது வருகின்றனர்.

Also read: கடைசி வரை விஜயகாந்தை பார்க்க விரும்பாத வடிவேலு.. பொட்டில் அடித்த மாதிரி சொன்ன மன்சூர்

Trending News