தளபதி ரசிகர்களின் பல மாத தவத்தின் பயனாக கிடைத்தது தான் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி. இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் இளம் வயது பவானியாக நடித்த மகேந்திரனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருந்தார் மகேந்திரன். அதேபோல் இந்தப் படத்தில் நடித்த பிறகு அவருடைய மவுசு கூடி விட்டது என்றே கூறலாம்.
ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டதாம். இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் காட்டிய அற்புதமான நடிப்பின் காரணமாக நடிகர் மகேந்திரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன் பல படங்கள் நடித்திருந்தாலும் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் மிரள விட்டார். இவருடைய நடிப்பிற்காகவே படத்தை இரண்டாவது முறை பார்க்க தூண்டுகிறது.
![](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/mahandhran.jpg)
ட்ரெட்மில் மூலம் பிரபலமான அஸ்வின் சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் மகேந்திரன் நேரில் சந்தித்தது சினிமா சம்பந்தப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை பேசியகதாக தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுத்த படங்களில் இவர்கள் சேர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![aswin-mahendran](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/01/aswin-mahendran-476x1024.jpg)
எனவே மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி மகேந்திரனுக்கு பெரிய மைல்கல்லாக மாறியதை கண்ட ரசிகர்கள் பலர் இணையத்தின் மூலம் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மகேந்திரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தற்போது வந்து கொண்டு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.