வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

கோடிகளை பொட்டியில் கேட்கும் முன்னணி நடிகர்.. ஒரு படம் ஓடுனதுக்கே இப்படியா என புலம்பும் தயாரிப்பாளர்கள்

சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய அந்த நடிகருக்கு தற்போது சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறான் போல. வடக்கில் இருந்து தெற்கு வரை உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும் இவர் தான் நடிக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்.

ஹீரோவாக மட்டும் இல்லாமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் அந்த முன்னணி நடிகர். ஹீரோவாக சில படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் மூலம் மக்களை கவர்ந்து விடுகிறார்.

இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட்டுள்ள நடிகராகவும் வலம் வருவது இவர்தான். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக தன் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார் அந்த நடிகர்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டு அடம் பிடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு நடிகருக்கு வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் 20 கோடி வரை சம்பளம் கேட்டு வருகிறார். இத்தனைக்கும் அந்த நடிகர் நடித்த சமீபத்திய படங்களில் அவர் வில்லனாக நடித்த அந்த ஒரு படமும் ஹிட்டானது என்பது கூடுதல் தகவல்.

இதன் காரணமாகவே அந்த நடிகரை ஒப்பந்தம் செய்வார்கள் பணத்தை பொட்டியில் எடுத்து வருகிறார்கள். ஹீரோவாக நடித்தால் கண்டிப்பாக ஒருநாள் மார்க்கெட் குறைந்துவிடும் என்பதை புரிந்துகொண்டு இப்போது குணச்சித்திர வேடங்களை ஏற்று சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி வருகிறார்.

போகிற போக்கை பார்த்தால் தயாரிப்பாளர்கள் அனைவரும் மொத்த சொத்தையும் விற்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள். அப்படி பணம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய வேண்டுமா? என்று கேட்டால் ஹீரோக்கள் அடம்பிடிக்கிறார்களே என்ன செய்வது என தலையில் அடித்துக்கொண்டு செல்கிறார்களாம். அந்த நடிகரின் காட்டில் தற்போது பணமழை வெளுத்து வாங்குகிறதாம்.

- Advertisement -spot_img

Trending News