புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாயகன் படத்தில் திணறிய நாசர்.. அதுக்கு கமல் கொடுத்த ட்ரீட்மென்ட்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டவர் நடிகர் நாசர். பல திரைப்படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டிய இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அப்படி நடித்த இவருக்கு மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் மாறுபட்ட நடிப்பில் உருவான நாயகன் திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தில் அவர் போலீஸ் ஆபீஸராக நடித்திருப்பார். நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுறும் தருவாயில் தான் இயக்குனர் மணிரத்னம் நாசரை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்தார். இப்போது நாசர் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

இதனால் அந்த திரைப்படத்தில் கமலின் முன்பு அவர் நடிக்க முடியாமல் தடுமாறி உள்ளார். அவரின் தடுமாற்றத்தை பார்த்த கமல்ஹாசன் அதை புரிந்து கொண்டு பயப்படாமல் இயல்பாக நடியுங்கள் என்று அவருக்கு தைரியம் கொடுத்துள்ளார்.

இதைப் பற்றி நினைவு கூர்ந்த நாசர் தற்போது ஒரு பேட்டியில் ஒவ்வொரு நடிகரும் சக நடிகனை புரிந்து கொள்ள வேண்டும், அது சினிமாவில் மிகவும் அவசியம் என்று கமலை பற்றி மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். அதன்பிறகு நாசர் கமலுக்கு மிகவும் நெருங்கிய நண்பராக மாறினார்.

கமலின் தயாரிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் நாசர் ஹீரோவாக நடித்தார். அதைத்தொடர்ந்து தேவர் மகன், உத்தம வில்லன் போன்ற பல திரைப்படங்களில் இவர் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். இன்றும் இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது.

Trending News