வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மனைவியை திருநங்கை என கூறிய நபர்.. செருப்படி பதில் கொடுத்த நகுல்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஐந்து நடிகர்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பிறகு காதலில் விழுந்தேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இவர் சுருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அகிரா என்ற அழகான பெண் குழந்தையும் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நகுல் தன் குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நகுல் தன் குழந்தை மற்றும் மனைவி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அழகிய தேவதைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு பலரும் லைக்குகளை கொடுத்தாலும் ஒரு நெட்டிசன் மட்டும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். அதாவது உங்கள் மனைவி திருநங்கை போல இருக்கிறார் என்று மோசமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்தால் கடுப்பான நகுல் சம்பந்தப்பட்ட நபரை கமெண்ட்டில் நன்றாக திட்டிவிட்டார். உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு, நீ யாரு என்ன ப்ரோன்னு கூப்பிடறதுக்கு, நீ பேசினதுக்கு கண்டிப்பா கஷ்டப்படுவ, இந்த மாதிரி பேசுறவங்க லைஃப்ல எதுவும் சாதிக்காமல் அடுத்தவங்கள குறை சொல்ற சீப்பான கேரக்டரா தான் இருக்க முடியும் என்று அந்த கமெண்டுக்கு பதில் அளித்துள்ளார்.

நகுலின் இந்த கோபத்தை பார்த்த அந்த நெட்டிசன் பதிலேதும் கூற முடியாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். சமீபகாலமாக சமூக வலை தளங்களில் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்று பலர் இதுபோன்ற மோசமான வார்த்தைகளை உபயோகித்து வருகின்றனர். அவர்களைப் போன்ற மனிதர்களுக்கு இந்த மாதிரி பதிலடி தான் கொடுக்க வேண்டும் என்று நகுலுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

nakul
nakul

Trending News