தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை எப்போதுமே ஒரு நடிகரை பிடித்து விட்டால் அவருக்கு செல்லமாக பெயர் வைப்பது என தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அடைமொழி பெயர் உண்டு அந்த பெயர் வருவதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்.
டெல்லி கணேஷ்
டெல்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். அப்போது இவர் பல நல்ல விஷயங்கள் செய்துள்ளார். அதனால் தான் இவருக்கு டெல்லிகணேஷ் என்ற பெயர் வந்ததாம்.
வாலி
பாடலாசிரியர் வாலியின் இயற்பெயர் டி எஸ் ரங்கராஜன். இவர் கிட்டத்தட்ட 15000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் ஒருவருடைய ரசிகர் ஆவார். அதாவது மாலி என்ற ஓவியரை போல் வர வேண்டும் என்ற ஆசையில்தான் தனது பெயரை வாலி என பாடல்கள் எழுதும்போது மாற்றியுள்ளார்.
கவுண்டமணி
கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன் இவர் மேடை நாடகங்களில் கவுண்டர் வேடம் போட்டு மிகச்சிறப்பாக நடித்ததால் கவுண்டமணி என்ற பெயர் பெற்றார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி மற்றவர்களை கலாய்த்து கவுண்டர் போடுவதாலும் கவுண்டமணி என அழைக்கப்பட்டார்
நிழல்கள் ரவி
ரவி என்பது இவருடைய இயற்பெயர். ஆனால் நிழல்கள் படத்தில் இவர் நடித்ததால் அதன்பிறகு நிழல்கள் ரவி என பெயர் வந்தது.
வெண்ணிறாடை மூர்த்தி, வெண்ணிறாடை நிர்மலா
வெண்ணிறாடை படத்தில் நடித்ததன் மூலம் இவர்கள் இருவருக்கும் வெண்ணிறாடை மூர்த்தி மற்றும் வெண்ணிற ஆடை நிர்மலா என பெயர் வந்தது.
ஓமக்குச்சி நரசிம்மன்
நரசிம்மன் என்பது இவருடைய பெயர் ஆனால் ஒல்லியாக இருப்பதால் இவரை அனைவரும் ஓமகுச்சி நரசிம்மன் என அழைத்து வந்தனர்.
குண்டு கல்யாணம்
குண்டாக இருப்பதால் இவரை காலப்போக்கில் அனைவரும் குண்டு கல்யாணம் என அழைத்து வந்தனர்.
ஒருவிரல் கிருஷ்ணாராவ்
கிருஷ்ணராவ் ஒருவிரல் படத்தில் நடித்ததால் அதன்பிறகு இவரை அனைவரும் ஒருவிரல் கிருஷ்ணாராவ் என அழைத்து வந்தனர்.
பசி நாராயணன்
நாராயணன் என்ற படத்தில் நடித்ததால் அதன்பிறகு இவரை பசி நாராயணன் என அழைத்துள்ளனர்.
போஸ் வெங்கட்
வெங்கட் சீரியல் ஒன்றில் போஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் அதன்பிறகு இவர் அனைவரும் போஸ் வெங்கட் என அழைத்தனர்.
ஆடுகளம் நரேன்
இவருடைய இயற்பெயர் நாராயணன் ஆனால் ஆடுகளம் படத்தில் இவர் நடித்தால் அதன்பிறகு இவரை அனைவரும் ஆடுகளம் நரேன் என அழைத்து வந்தனர்.