வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷின் சூப்பர்ஹிட் படத்தை மிஸ் பண்ண பாய்ஸ் பட நடிகர் .. இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்

நடிகர் தனுஷ் தன் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது ஆரம்பக்கால படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்றாலும், தனுஷின் தோற்றம் கேலிக்கும் கிண்டலுக்கும் அன்றைய காலத்தில் உள்ளானது.

இவை எதையுமே பெரிதுப்படுத்தாத தனுஷ் தன் நடிப்பு, நடனம் உள்ளிட்ட திறமைகளை திறன்பட வளர்த்துக்கொண்டு இளைஞர்களின் ஆஸ்தான நாயகனாக தற்போது வரை வளம் வருகிறார்.பொதுவாக தனுஷ் தேர்வு செய்யும் பெரும்பாலான படங்களின் கதைகள் காமெடி, ஆக்ஷன், காதல் உள்ளிட்டவை கலந்து தான் இருக்கும். அந்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளன.

Also Read: சூர்யாவை பாலோ செய்த நடிகர் தனுஷ்.. சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட சம்பவம்

அதில் தனுஷின் கேரியருக்கு முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது தான் திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தின் வாய்ப்பு முதன் முதலில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடித்த நடிகருக்கு தான் முதலில் கதை சொல்லப்பட்டதாம். ஆனால் இந்த கதையை அவர் வேண்டாம் என சொல்லவே தனுஷ் அந்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார். 2006 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் அந்தாண்டில் சூப்பர்ஹிட் படமாகும்.

மிடில் கிளாஸ் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் தனுஷ், பணக்கார பெண்ணான ஸ்ரேயாவை காதலிக்கிறார். இருவரும் காதலித்து வரும் தருவாயில், ஷ்ரயாவின் அண்ணனாக நடிக்கும் பிரகாஷ் ராஜ், தனுஷிடம் 25 லட்சம் ருபாய் பணத்தை கொடுத்து தன் தங்கையை காதல் செய்யக்கூடாது என டீல் பேசுவார். அந்த பணத்தை வைத்து உழைத்து, பெரிய பணக்காரனாக மாறி ப்ரகாஷிராஜை அவ்வப்போது சந்தித்து நக்கலாக பேசும் காமெடி காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்தும்.

Also Read: களத்தில் இறங்கிய கொக்கி குமார்.. செல்வராகவனின் தந்திரத்தில் மாட்டிக் கொண்ட தனுஷ்

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தன் காதலியை கடைசி வரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தன் காதலை இறுக்கமான மனதுடன் அடமானம் வைத்ததாக கூறப்படும் வசனம் திரையரங்குகளில் கைதட்டல்களை பெற்றது. இப்படத்தில் தனுஷின் தோற்றம், நடனம், டையலாக்குகள் அனைத்தும் அன்றைய ரசிகர்களை ஈர்த்த நிலையில், இந்த படம் அவரின் கேரியரில் முக்கியமான படமாக மாறியது. இந்த படத்தின் கதையை பாய்ஸ் படத்தின் மூலமாக அறிமுகமான நடிகர் பரத்திடம் தான் முதன்முதலில் கூறப்பட்டதாம்.

அந்த சமயத்தில் இயக்குனரிடம் கதையை கேட்ட பரத், வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். அதற்கான காரணம் தனக்கு அப்போது அந்த கதை புரியாமல் போனதாக கூட இருக்கலாம் என ஒரு பேட்டியில் பரத் புலம்பி வருகிறார்.பல வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பரத், தற்போது ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். இந்த பேட்டி வைரலாகிய நிலையில், நல்லவேளை பரத் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடிக்கவில்லை என ரசிகர்கள் பெருமூச்சு விட்டுவருகின்றனர்.

Also Read: மனைவியை கொலை செய்யும் பரத்.. அதிலிருந்து தப்பிக்க உச்சகட்ட பயத்தை காட்டிய லவ் டீசர்

Trending News