ராஜாவாக இருந்தவன் ஆண்டியாகி அனாதையாக இறந்த கதைதான் பாண்டியனின் வாழ்க்கையில் நடந்துள்ளது. எங்கேயோ சந்த கடையில் வலையில் வைத்துக் கொண்டிருந்தவரை கூப்பிட்டு உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்தவர் பாரதிராஜா.
பாண்டியன் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வந்த பாண்டியன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்த பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். பார்த்தவுடனே பெண்களுக்கு பிடித்துப் போகும் அளவுக்கு ஆணழகன் தான்.
சினிமாவில் நல்லபடியாக இருந்த பாண்டியன் அரசியல் ஆசையால் அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அங்குதான் சனி சண்டை போட ஆரம்பித்துள்ளது.
அரசியல் வட்டாரங்களில் சில நண்பர் பழக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுடன் குடியும் கூத்துமாக இருந்து வந்துள்ளார். மேலும் தனது நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று உதவி செய்து கொடுத்துள்ளார்.
இப்படி நட்பின் இலக்கணமாக வாழ்ந்து வந்த பாண்டியராஜன் கடைசி கட்டங்களில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் தனது நண்பர்களை தேடி சென்றாராம். ஆனால் அவர்கள் பாண்டியனை தன் வீட்டில் வளர்க்கும் நாய் அளவுக்குக் கூட மதிக்கவில்லை.
போதாக்குறைக்கு அதிகமாக குடித்து கல்லீரல் பாதிக்கப்பட்டுவிட்டது. தன்னுடைய கடைசி காலகட்டங்களில் மருத்துவ செலவுக்கு கூட காசு இல்லாமல் பரிதாபமாக இறந்த பாண்டியனின் கதை நண்பர்கள் என்ற பெயரில் போலித்தனமாக பழகுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது. பாண்டியன் நடிப்பில் உங்கள் மனம் கவர்ந்த படம் என்ன? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.