
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களது திறமையின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளனர் அப்படி ரசிகர்களிடம் காமெடி மூலம் பிரபலமானவர் பாண்டு.
இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன முக்கால்வாசியான படங்கள் காமெடி படங்கள்தான்.
அதிலும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் இட்லி மற்றும் இந்த நிலை மாறும். இந்த இரண்டுபடங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை ஆனால் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தான் பெரிய நடிகரின் திரைப்படம்.

நடிப்பைத் தாண்டி அரசியலிலும் இவர் கால் பதித்துள்ளார் அதாவது அதிமுகவின் கட்சி கொடியை வடிவமைத்தவர் பாண்டு.
சமீபகாலமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பாண்டு திடீரென காலையில் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 74.
தற்போது இவரது மனைவிக்கும் காரணத்தோடு இருப்பதால் தனியார் மருத்துவமனையில் இவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் பல நடிகர்களும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.