செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

நடிகரைப் பற்றி தெரியாமல் மொத்த சம்பளத்தையும் கொடுத்த தயாரிப்பாளர்.. இனி அதோகதிதான்!

பிரபல நடிகரை பற்றி விசாரிக்காமல் அவரது அடுத்த படத்திற்கான சம்பளத்தை முதல் நாளே அள்ளிக் கொடுத்து விட்டதை நினைத்து கோலிவுட் வட்டாரமே அந்த தயாரிப்பாளரை பரிதாபமாக பார்த்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி தற்போது இந்தியாவில் கொண்டாடும் இயக்குனராக வலம் வருபவர்தான் அந்த நடிகர். இவர் ஹீரோவாகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை இயக்குனராக தன்னுடைய கேரியரை வைத்திருந்த அந்த நடிகர் ஒரு பேய் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபல ஹீரோவாக வலம் வருகிறார்.

இவரது படங்கள் முதலுக்கு மோசம் இல்லை எனும் அளவுக்கு ஓடி தயாரிப்பாளரை காப்பாற்றி விடுகிறது. ஆனால் இவரது நேரமோ என்னமோ, கிட்டதட்ட இவரது நடிப்பில் ஏற்கனவே 8 படங்கள் ரெடியாக ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

ஆனால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சிக்கல் உள்ளது. இது தெரியாமல் சினிமாவுக்கு புதிதாக வந்த தயாரிப்பாளர் ஒருவர் அந்த நடிகரின் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டு அந்த நடிகருக்கு உண்மையாக இருக்க வேண்டுமென மொத்த சம்பளத்தையும் முன்னாடியே கொடுத்து விட்டாராம்.

சம்பளம் வாங்குன கையோடு சென்றவர்தானாம். இப்போ வரை அந்த படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பிக்கப் படாமல் அப்படியே கிடக்கிறது. இதைப்பார்த்த மற்ற தயாரிப்பாளர்கள், அந்த நடிகரை நம்பி முதலிலேயே மொத்த பணத்தையும் யாராவது கொடுப்பாங்களா என இவரை பாவமாக பார்க்கிறார்களாம்.

Trending News