செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ரொம்ப ஓவரா போறீங்க ஆன்ட்டி.. தேவையில்லாமல் சீன் போட்டு கடுப்பேற்றிய பூர்ணா

தமிழ் சினிமால பரத்துடன் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட நடிகை பூர்ணா. ஒரு நடிகையா மட்டுமில்லால் டிவி நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர் அவரை தொட்டதால், ஓவரா டென்ஷனாகி அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

நடிகை பூர்ணா வின் இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட பூர்ணா தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல், துரோகி, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், தகராறு, ஜன்னலோரம், கொடிவீரன், மணல் கயிறு 2, சகலகலா வல்லவன், மச்சம் இருக்கு, லாக்கப், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா அல்லாது மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்கள் திகில் நிறைந்த பேய் படங்களில் நடித்துள்ளார். இதனால் இவரை “தெலுங்கு படங்களின் பேய்” என்று அழைப்பர். கதாநாயகியா இல்லாமல் சிலர் ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக மிகச் சிறப்பாக பணியாற்றி வந்தார். அந்த நிகழ்ச்சி பேசிக்கொண்டிருக்கும்போது போட்டியாளராக பங்கேற்ற இமானுவல் என்பவர் பூர்ணாவின் தோள் மீது எதர்ச்சியாக கை வைத்தார்.

சற்றும் எதிர்பாராத பூர்ணா தன் மீது கையை வைத்தவுடன் என்ன செய்கிறாய் என்ன இதெல்லாம், நீ எப்படி என்னை தொடலாம்? என்று போட்டியாளரை பார்த்து கோபப்பட்டு பேசிவிட்டு கோபமாக சென்றுவிட்டார். பூர்ணா உடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் இருவர் இருந்தனர். பூர்ணாவின் செயலால் அங்கு சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை கண்ட ஆடியன்ஸ் பூர்ணாவின் இந்த ஓவர் ரியாக்ஷனை கண்டு கடுப்பாகி உள்ளனர். எதர்ச்சியாக போட்டியாளர் பூர்ணாவின் மீது கை வைத்ததற்கு இத்தனை ஓவர் ரியாக்சனா என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Trending News