திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தோல்வியால் துவண்டு போன பாகுபலி.. வரிசை கட்டி காத்திருக்கும் பிரபாஸின் 4 படங்கள்

Actor Prabhas upcoming movies: பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பான் இந்தியா படங்களில் தான் கமிட் ஆகிறார். அவை அனைத்துமே மெகா பட்ஜெட் படங்களாக இருந்த போதிலும், துரதிஷ்டவசமாக ரசிகர்களின் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறின. குறிப்பாக சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ், சலார் என வரிசையாக பிரபாஸ் தொடர் தோல்வியை தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தற்சமயம் பிரபாஸ் நான்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பிரபாஸ், உலகநாயகன் கமலஹாசன் இணைந்து நடிக்கும் கல்கி 2898 AD படம் வரும் மே 9ம் தேதி ரிலீஸ் ஆக தயாராகிறது.

இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து பிரபாஸ், இயக்குனர் மாருதி கூட்டணியில் பான் இந்தியா படமாக ‘தி ராஜா சாப்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

Also Read: நடிகராக அவதாரம் எடுக்கும் இயக்குனர் ராஜமௌலி.. எந்த படத்தில் தெரியுமா.!

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் நான்கு படங்கள்

இந்த படம் ரொமான்டிக்- ஹாரர் ஜானரில் உருவாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் துவங்கப் போகின்றனர். இதனை 2025 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதோடு அனிமல் படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் தனது 25வது படமான ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படம் காவல்துறையை மையப்படுத்திய படம் என்றும் தெரியவந்துள்ளது. சலார் படத்திற்கு பின் அடுத்தடுத்து பிரபாஸ் நடிப்பில் நான்கு படங்கள் வரிசையாக ரிலீசாக போகிறது. அதில் கல்கி 2898 AD திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால், அவற்றை பிரபாஸ் பூர்த்தி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: நம்பியவர்கள் எல்லாம் கைவிட்ட பரிதாபம்.. தொடர்ந்து 4 ஃப்ளாப் கொடுத்த பிரபாஸ்

Trending News