வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

நடனத்தை தாண்டி நடிப்பிலும் பட்டையை கிளப்பிய பிரபுதேவாவின் 6 படங்கள்.. 90ஸ் ரசிகர்களின் நிஜ ரோமியோ

Actor Prabhudeva 6 hit movies and interesting stories about his movies: ஆரம்ப காலங்களில் நடன அமைப்பில் ப்ராப்பர்ட்டியுடன் ப்ராப்பர்ட்டியாக நின்று இருந்த பிரபுதேவா, பின்னாளில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் மற்றும் நடன புயலாக அறியப்பட்டார். திரைத் துறையில் நடன இயக்குனராக தனது கேரியரை துவங்கினார். தொடர்ந்து நடிகர், இயக்குனர் என பன்முக அவதாரங்களை எடுத்தாலும் நினைவில் நிற்பது என்னவோ அவரது நடனம் மட்டுமே.

ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற “சிக்குபுக்கு ரயிலே” பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானார். பவித்ரன் இயக்கத்தில் 1994 ஆண்டு வெளிவந்த இந்து திரைப்படத்தில் நடிகனாக அறிமுகமானார். திரைத்துறையில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரும் நடிகனாக பிரபு தேவாவின் நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் மட்டுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது  அவைகளில் சில

காதலன்: பிரபுதேவா அறிமுகமான அதே ஆண்டு சங்கரின் இயக்கத்தில் காதலன் படத்தில் நக்மாவுடன் கரம் கோர்த்தார். இயக்குனர் சங்கர் பிரபுதேவாவின் ஒல்லியான தேகத்தை பார்த்து நடிக்க வைக்க தயங்கினாராம்.

ஜென்டில்மேன் மற்றும் சூரியன் படத்தில் பிரபுதேவாவின் பாடலை கண்ட தயாரிப்பாளர் குஞ்சுமோன் அவர்கள் காதலன் படத்திற்கு பிரபுதேவா தான் வேண்டுமென்று அடம்பிடித்து நடிக்க வைத்தாராம். படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.  பிரபுதேவா தான் சிறுவயதில் கற்ற பரதநாட்டிய வித்தைகள் அனைத்தையும் மொத்தமாக இறக்கி வைத்தாராம் காதலனில்.

மின்சார கனவு: ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் 175  நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. வெளிவந்த புதிதில் ஊ லாலா பாடல்   இளைஞர்கள் அனைவரும்  முணுமுணுக்கும் பாடலாக அமைந்தது.  சிறந்த நடன இயக்குனராக பிரபுதேவாவிற்கு தேசிய விருது கிடைத்தது.

காதலா காதலா: ஒரு பொய் பல பொய்களை குட்டி போடும் என்பதை படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவையாக கையாண்டது இப்படத்திற்கான பிளஸ்.  சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, கிரேசி மோகன் விஸ்வநாதன், ஸ்ரீவித்யா என பலரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்தனர். பிரபுதேவா பெயிண்டர் ஆக திக்கு வாயில் நடித்து உள்ள இப்படம் எவர்கிரீன் மூவியாக பார்க்கும் அனைவரையும் வயிறு வலிக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் பிரபுதேவாவின் நடிப்பில் நினைவிருக்கும் வரை, பெண்ணின் மனதை தொட்டு, தமன்னாவுடன் நடித்த தேவி போன்ற படங்கள் பிரபுதேவாவின் பிளாக்பஸ்டர் ஹிட் வரிசையில் அமைந்தது.  50 வயதை கடந்த பின்னும் அதே கடின உழைப்புடனும் விடாமுயற்சி இடமும் உழைத்துக் கொண்டிருக்கும் பிரபுதேவா, தற்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில்  “ஜாலியோ ஜிம்கானா” படத்திற்காக மடோனாவுடன் கூட்டணி அமைத்துள்ளார் பிரபுதேவா.

- Advertisement -spot_img

Trending News