வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

உங்களுக்கு வெட்கம் சூடு சொரணை இருக்கா.? சரத்குமார், ராதிகாவின் முகத்திரையை கிழித்த பிரகாஷ்ராஜ்

Actor Prakashraj: பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் நாட்டு நடப்புகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அதில் தற்போது அவர் சரத்குமார், ராதிகா இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வரும் தேர்தலில் ராதிகா பிஜேபி சார்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் அவர் இருக்கும் நிலையில் சரத்குமார் பக்க பலமாக செயல்பட்டு வருகிறார்.

ஆனால் இந்த ஜோடி பிஜேபியில் இணைந்ததிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகின்றனர். அதிலும் சரத்குமார் தன்னுடைய கட்சியை பிஜேபியுடன் இணைத்தது கடும் விமர்சனமானது.

இதற்கு பின்னணியில் பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும் பணம் தான் முக்கியமாக இருக்கிறது. அதில் இருவரும் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி கிட்டத்தட்ட 15 கோடியாக இருக்கிறது.

சரத்குமாரை தாக்கி பேசிய பிரகாஷ்ராஜ்

அதேபோல் ராதிகா மீது செக் மோசடி வழக்கும் இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க தான் அவர்கள் கட்சியில் சேர்ந்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது பிரகாஷ்ராஜ் கூட இதைத்தான் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு என்ன கஷ்டமோ அந்த கட்சியில் போய் சேர்ந்து விட்டார்கள். சூடு சொரணை வெட்கம் இதெல்லாம் கிடையாது.

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கெட்டுப் போங்கள். எதற்காக தமிழ்நாட்டை விக்கிறீங்க என கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இதற்கு தற்போது ஆதரவும் குவிந்து வருகிறது.

Trending News