புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய் பட வாய்ப்பால் அடித்த அதிர்ஷ்டம்.. தளபதியை ஓவர் டேக் செய்ய பிரஷாந்துக்கு கிடைச்ச விலையுர்ந்த கிப்ட்

Thalapathy Vijay: 90களில் காலகட்டத்தில் பெண் ரசிகைகளை தன் வசம் கட்டி வைத்திருந்தவர் தான் பிரசாந்த். அப்போல்லாம் லவ் பெயிலியர் ஆனவங்க, ஒரு தலை காதலில் இருப்பவர்கள் தான் விஜய் படத்தை அதிகமாக கொண்டாடினார்கள்.

ஆனால் இப்போ நிலைமை அப்படியே தலைகீழா மாறிடுச்சு. தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விஜய் இருக்கிறார். பிரசாந்த் பீல்டவுட் ஆன 90ஸ் ஹீரோவாக ஆகிவிட்டார். பிரசாந்துக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு படங்கள் எதுவும் இல்லை.

சினிமாவில் நீடித்து இருக்க வேண்டும் என்றால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கக் கூடாது என்பது இப்போதான் அவருக்கு புரிஞ்சு இருக்கு. அந்த சமயத்தில் அவருக்கு கை கொடுத்திருப்பது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படம் தான்.

பிரசாந்த், லைலா, பிரபுதேவா, சினேகா என பெரிய 90ஸ் கூட்டமே இந்த படத்தில் இருக்கிறது. பிரசாந்த் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இன்னும் ஒரு பெரிய காரணம் இருக்கிறது. பிரசாந்த் நடிப்பில் உருவாகிய அந்தாதுண் படம் ஒரு சில வருடங்களாகவே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

GOAT படத்தின் மூலம் தன்னை ஒரு ஆக்டிவ் ஹீரோவாக பிரசாந்த் நிலை நிறுத்த வேண்டும். அதன் மூலம் தான் அந்தாதுண் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். இதனால்தான் இந்த படத்தை தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார் பிரசாந்த்.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் ஆறாம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருடைய அப்பா தியாகராஜன் அவருக்கு விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கி இருக்கிறார். இந்த பரிசு வழங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகியது.

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை ஒன்றிலிருந்து தியாகராஜன் பிரசாந்தை வெளியே கூட்டி வருகிறார். அப்போது அங்கே பி எம் டபிள்யூ கார் ஒன்று இருக்கிறது. அந்த காரைத்தான் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி இருக்கிறார்.

இந்த கார் உடைய மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம் ஆகும். விஜய் படத்தில் நடிச்சா மட்டும் பத்தாது, விஜய் மாதிரி தன்னை கொஞ்சம் கெத்தா காட்ட முடிவு பண்ணிட்டாரு போல பிரசாந்த். விஜய் எட்டு கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராயஸ் காரில் படபிடிப்புக்கு வந்து போகிறார்.

அப்படி இருக்கும்போது டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரு கோடியில் ஆவது கார் வச்சிக்கிட்டா தான் அவருக்கும் கொஞ்சம் கெத்தா இருக்கும் போல. அதனாலதான் தியாகராஜன் இப்படி ஒரு பரிசை கொடுத்திருக்கிறார். சமீப காலமாக டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ் என்ற வார்த்தை பெரிய அளவில் வைரலாகி வருகிறது. உண்மையில் பிரசாந்த் தான் டேட்ஸ் லிட்டில் பிரின்ஸ் என்பதற்கு தகுதியானவர்.

Trending News