90 களின் காலகட்டத்தில் துள்ளல் உடன் வசீகரமான முகத்தைக் கொண்டு பல பெண்களை கிரங்கடித்தவர் நடிகர் பிரசாந்த். விஜய் மற்றும் அஜித்துக்கு முன்பு முன்னணி ஹீரோவாக இருந்த இவர் சில காரணங்களால் நடிப்பில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டார். இருந்தாலும் அவர் சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்திலேயே தனக்கான ஒரு சொந்த பிசினஸை ஆரம்பித்து இருக்கிறார் பிரசாந்த்.
சென்னையை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே ஏதாவது ஒரு விழாக்கள் என்றால் துணி எடுக்க விரும்புவது சென்னை தி நகரில் உள்ள கடைகளில் தான். எத்தனையோ நாட்கள் தி.நகரை கடந்து வந்த நமக்கு அங்கு பிரசாந்துக்கு சொந்தமான கடை ஒன்று இருப்பது அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தி நகரில் உள்ள சவுத் உஸ்மான் ரோட்டில் தான் பிரசாந்துக்கு சொந்தமான டவர் போன்று இருக்கிறது.
பிரசாந்த் கோல்ட் டவர் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த கட்டிடம் முழுக்க நகை கடைகள் தான் இருக்கிறது. இந்தியாவில் இந்த கட்டிடம்தான் முதல் முறையாக நகை கடைகளுக்கு என்று தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சென்று இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பிரசாந்துடன் கதாநாயகியாக நடித்த பல நடிகைகளும் இந்த கட்டிடத்தின் தொடக்க விழாவிற்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த கட்டிடம் அதிக வேலைபாடுடன் 2011 ஆம் ஆண்டு கட்டப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஸ்கொயர் வீட்டில் இந்த கட்டிடம் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 10 தளங்களுடன் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. அத்தனை தலங்களும் நகை கடைகளுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் பிரசாந்துக்கு மாதம் மட்டும் லட்சத்தில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது.