கன்னட திரை உலகில் முக்கியமான நடிகர் புனித் ராஜ்குமார். இவரது படங்களுக்கு எப்போதும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய், அஜித் போல இவருக்கு கன்னடவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவருக்கு இன்று காலையில் வீட்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தினர் அருகில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
ஆனால் புனித் குமார் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் விக்ரம் மருத்துவமனையில் திரண்டுள்ளனர். இதனால் பெருமளவு கன்னட காவல்துறையினர் மருத்துவமனையைச் சுற்றி காவலுக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இவர் இறப்பதற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு இவரது அண்ணனான சிவராஜ்குமார் படத்தினை பற்றி ட்விட் செய்துள்ளார். அதில் தனது அண்ணன் வெற்றி அடைய வாழ்த்துக்கள் எனவும் மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வெற்றி பெறுவதற்கு எனது அன்பான வாழ்த்துக்கள் பதிவிட்டுள்ளார்.

தற்போது இவர் பதிவிட்டுள்ள ட்வீட்களை பார்க்கும்பொழுது அவர் நினைப்பை மறக்க முடியாமல் ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறோம்.