நடிகர் நடிகைகளுக்கு சம்பளம் ஒழுங்காக முறைப்படுத்த வேண்டும் எனவும், OTT படங்கள் விற்பனையை முறையாக்க வேண்டும் எனவும் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர்களின் உதவியாளர்களுக்கு அவர்கள் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த திரைப்பட சங்கங்கள் முடிவெடுத்து இருக்கின்றன.
இதே போன்று சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவிலும் முடிவு கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்னும் அது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் தெலுங்கு இண்டஸ்ட்ரியில் நடக்கும் இந்த போராட்டத்தினால் நடிகர், நடிகைகளின் உதவியாளர்களின் சம்பளம் மீண்டும் பேசுபொருளாகி விட்டது.
Also Read: பா ரஞ்சித்தை பாராட்டும் சாக்கில் ரஜினி செய்த தந்திரம்.. இது சாத்தியமா என குழப்பத்தில் கோலிவுட்
பொதுவாக நடிகர் நடிகைகள் அவர்களுக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட், டிசைனர்ஸ், பவுன்சர்ஸ் என தங்களை சுற்றி குறைந்தபட்சம் ஒரு 8 பேரை உதவியாளர்களாக வைத்து கொள்கின்றனர். இவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்கின்றனர்.
தமிழ் நடிகர்களில் ரஜினியின் உதவியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 75,000 கொடுக்கப்படுகிறது. விஜய் மற்றும் தனுஷ் உதவியாளர்களுக்கு 50,000 கொடுக்கப்படுகிறது. நடிகர் சிம்பு பத்துதல படத்தின் ஷூட்டிங்கிற்கு 21 உதவியாளர்களுடன் வந்திருக்கிறார். இதற்கு ஒரு நாள் சம்பளம் மட்டுமே 80,000 இருக்கலாம்.
Also Read: ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட தளபதி.. இன்று பாக்ஸ் ஆபீஸ் கிங்
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால் அவர்களுடைய உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 15,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்கு பிறகு தனியாக எந்த உதவியாளர்களையும் வைத்து கொள்வதில்லையாம்.
நடிகைகளில் ரம்யாகிருஷ்ணனின் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 80,000 கொடுக்கப்படுகிறது. நயன்தாரா உதவியாளர்களுக்கு 65,000, சமந்தா மற்றும் ராசி கண்ணா உதவியாளர்களுக்கு 60,000 சம்பளமும், கீர்த்தி சுரேஷ் 50,000 சம்பளமும் கொடுக்கப்படுகிறது. நடிகை நித்யா மேனன் மட்டும் சம்பளத்திற்க்காக கட்டாயப்படுத்துவதில்லையாம்.
Also Read: நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகர் ஏகே … பிராடு சிட்டிசன் அஜித் என்னும் ஹாஸ்டேக் டிரண்ட்