செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

Actor Rajini is expected to support vijays politics entry: தமிழக அரசியலில் இருந்து தமிழ் சினிமாவை பிரிப்பது என்பது இயலாத காரியம். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. ஒன்று இரண்டு தலைவர்களை விடுத்து மற்ற அனைவரும் தமிழ் சினிமாவின் மூலமாகவே அரசியலில் நுழைந்து ஆதிக்கம் செலுத்தியிருந்தவர்கள். உச்சம் பெற்ற நடிகர்களின் அடுத்த இலக்கு அரசியல் என்பதாகவே இருந்தது.

அண்ணா தொடங்கி  எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா விஜயகாந்த் கமல் என இவர்களின் வரிசை நீண்டு கொண்டே இருக்க இன்றைய இளைஞர்களின் நாடித்துடிப்பாக இருக்கும் விஜய் அவர்களும் தமிழக அரசியலில் நுழைய உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. விஜய் தான் தொடங்க உள்ள கட்சிக்கான அனைத்து வேலைகளையும்  தீவிரப்படுத்தி உள்ளார்.

கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு?  காலத்தின் கையில் அது இருக்கு என்று இருபது ஆண்டு காலமாக இப்பவோ அப்பவோ என்று எதிர்பார்ப்பை கிளப்பிய ரஜினி அவர்கள் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில்  ஈடுபட மாட்டேன் என விலகிக் கொண்டார். ரஜினி வருவார்! முதல்வர் ஆவார்! என்று நம்பி இருந்த ரசிகர்களுக்கோ பலத்த ஏமாற்றம்.

Also read: விஜய் உடனான சண்டைக்கு தலைவரே வைத்த முற்றுப்புள்ளி..! ஜல்லிக்கட்டு காளையைப் போல் தளபதி கொம்பை சீவி விட்ட தலைவர்

சற்று நாட்களுக்கு முன் நடந்த லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் இளைய தளபதி விஜய் இவர்களுக்கு இடையேயான பனிப்போருக்கு தலைவர் முற்றுப்புள்ளி வைத்ததுடன் “விஜய்க்கு நல்ல மனசு இருக்கு,மக்களுக்காக நல்லது செய்வதற்கு ஒரு பெரிய தியாகம் வேணும்னு” விஜய்யை தியாகி ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளினார் ரஜினி.

இப்போது மேட்டர் என்னவென்றால் ரஜினி விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை கமலுக்கு கொடுக்காத ஃபுல் சப்போர்டும் இப்ப விஜய்க்கு கொடுக்கப் போகிறார் தலைவர். சினிமாவுக்கு என்று முட்டுக்கட்டையாக இருந்த அரசியல் பெரும் புள்ளிகளை விஜய்யின் வெற்றியின் மூலம் பழிக்கு பழிவாங்க திட்டமிட்டுள்ளார் தலைவர்.

2026 தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக உருப்பெறும் விஜய்யின் தமிழக முன்னேற்றக் கழகத்திற்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து வெற்றி பெற வைப்பதோடு தன்னால் முடியாததை விஜய்யை வைத்து சைலன்டாக செய்யப் போகிறார் தலைவர். அதனால் இனிமேல் தலைவர் முழு ஆதரவும் விஜய்க்கு கிடைப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் இன் சர்க்கார் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியலுக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளார் தளபதி. விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பல்வேறு அரசியல் பெரும் புள்ளிகளுக்கும் பீதியை கிளப்பி உள்ளது. தமிழக மக்கள் மாற்றம் வேண்டி நெடு நாட்களாக தவம் கிடந்து வருகின்றனர். ஒருவிரல் புரட்சி ஏற்படப்போவது உறுதி. மாற்றம் வேண்டி இருக்கும் மக்களுக்கு தரமான சம்பவம் காத்துக்கொண்டிருக்கிறது.

Also read:விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் இதுதான்.. திராவிடத்தை ஆட்டம் காண வைக்க வரும் தளபதி

Trending News