ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

திருப்தி அடையாத ரஜினிகாந்த்.. ஆழம் தெரியாமல் பாதாளத்தில் இறக்கி விட்ட அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல முன்னணி இயக்குனர்களிடம் படம் பண்ணுவதை விட சமீப காலமாக இளம் இயக்குனர்களை நம்பி அவர்களின் படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களை தான் தேர்ந்தெடுப்பார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இணைந்தவர் தான் இயக்குனர் நெல்சன்.

நெல்சன் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களில் வித்தியாசமான கதைகளை கொண்டு வெற்றி கண்ட இயக்குனர் அந்த வரிசையில் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் பணி புரிந்த நெல்சன் கொஞ்சம் கலவையான விமர்சனங்களை தான் அந்த படத்தில் பெற்றார். பீஸ்ட் பட ரிலீசுக்கு பிறகு நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read: ஏ ஆர் ரகுமானுக்கு ஒரு மாதிரி பயத்தை காட்டிய அனிருத்.. சூழ்நிலை சரியில்லை என அதிரடியாக எடுத்த முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் முழு மனதோடு தான் நெல்சன் சொன்ன கதையை ஏற்றுக் கொண்டார். ஆனால் போகப் போக அவருக்கு இந்த கதையின் மீது அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் அவரே கதைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்ததோடு மல்டி ஸ்டார்ஸையும் படத்தில் இறக்கி இருக்கிறார்.

அந்த வரிசையில் இணைந்தவர்கள் தான் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப். கதையில் நம்பிக்கை இல்லாததால் தான் சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் அதிகமாக தலையிட்டு வருகிறார். இது அடுத்தடுத்து படத்தில் சேரும் கேரக்டர்களிலேயே தெரிகிறது.

Also Read: ரஜினிக்காக எழுதிய கதையில் நடிக்கும் வாரிசு நடிகர்.. பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள ராஜ்கமல் நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனுக்கு பட வாய்ப்பு கொடுத்ததற்கு காரணமே இசையமைப்பாளர் அனிருத் தான். அவர் மூலமாகத்தான் நெல்சன் சூப்பர் ஸ்டாருக்கு கதை சொல்லி இருக்கிறார். அதனால் தான் ரஜினியும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார் . ஆனால் தற்போது ரஜினியின் நம்பிக்கை மொத்தமாக போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இருந்தாலும் படத்தில் ஒப்பந்தமாகிய பின்பு நெல்சனை கழட்டிவிட்டால் அவருடைய சினிமா கேரியரே மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி, நெல்சனுக்கு துணையாக சப்போர்ட் செய்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித், விக்னேஷ் சிவனை தன்னுடைய அடுத்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலக்கியது அவருடைய சினிமா கேரியரை அதள பாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படி ஒரு சூழ்நிலையை நெல்சனுக்கு கொடுத்து விடக்கூடாது என்பதால் ரஜினி இப்படி செய்து வருகிறார்.

Also Read: ரஜினி மாஸ் படத்திற்கு ரீமேக் செய்ய வாய்ப்பே இல்ல.. கிடுக்கு புடி போட்ட தயாரிப்பாளர்

Trending News