வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோயின் மீது கிரஸ்சாகி தூக்கத்தை தொலைத்த ராஜ்கிரண்.. அம்மாவிடமே சிபாரிசுக்கு சென்ற மாயாண்டி

Actor Rajkiran: நடிகர் ராஜ்கிரண் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக இருந்தவர். திரைகதை ஆசிரியர், தயாரிப்பாளர் என ஆரம்பித்த இவருடைய சினிமா பயணம் தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல பரிமாணங்களில் மாறி இருக்கிறது. ராஜ்கிரண் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்தாலும் தன்னுடைய 40 ஆவது வயதில் தான் ஹீரோவானார்.

ராஜ்கிரண் முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த மீனா தமிழில் முதன் முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் இந்த படம் தான். தெலுங்கில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த மீனாவை பார்த்து இந்த படத்தின் சோலையம்மா கேரக்டருக்கு இவர்தான் கரெக்டாக இருப்பார் என்று ராஜ்கிரண் தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

Also Read:அண்ணன் தங்கை சென்டிமென்டை கொண்டாடிய 5 படங்கள்.. நடிப்பில் பாசத்தை தூக்கி சுமந்த ராஜ்கிரண்

கதாநாயகனாக நடித்த முதல் படமே வெள்ளி விழா கண்டது ராஜ்கிரனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. நம்மையும் ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள், அதற்கு முழுக்க காரணம் நடிகை மீனா மட்டும்தான் என்று நம்பி இருக்கிறார். இதனாலேயே அவருக்கு மீனா மீது கிரஷ் ஏற்பட்டு இருக்கிறது.

எப்படியாவது நடிகை மீனாவை தன்னுடைய அடுத்தடுத்த தயாரிப்பில் நடிக்க வைத்து விட வேண்டும் என்று பல முயற்சிகளை செய்திருக்கிறார் ராஜ்கிரண். ஆனால் மீனா அது எதற்குமே பிடி கொடுக்காமல் கைநழுவி போயிருக்கிறார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து குறுகிய காலத்திலேயே மீனா டாப் ஹீரோயின் ஆகவும் வளர்ந்து விட்டார்.

Also Read:ஒரு கோடி சம்பளம் வாங்கிய ராஜ்கிரண்.. எந்த படத்திற்கு தெரியுமா..?

இப்படி போய்க் கொண்டிருந்த நேரத்தில் நடிகர் ராஜ்கிரண் மீனாவின் அம்மாவிடமே சென்று இது பற்றி பேசி எப்படியாவது தன்னுடன் ஒரு படம் நடிக்க வைத்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய அம்மாவும் முதல் பட வாய்ப்பு கொடுத்த ஹீரோ என்பதால் மீனாவை சமாதானப்படுத்தி ஓகே சொல்ல வைத்திருக்கிறார். அப்படி ஆறு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் தான் பாசமுள்ள பாண்டியரே.

சமீபத்தில் நடைபெற்ற மீனா 40 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்கிரண் மீனா உடனான தன்னுடைய முதல் படத்தின் அனுபவத்தை பற்றி கூட பகிர்ந்திருந்தார். அதில் மீனா சூட்டிங் முடியும் வரை தன்னிடம் பேசவே இல்லை என்றும், தான் முரட்டுத்தனமாக இருப்பதால் அந்த பயத்திலேயே இருந்தார் என்றும், அவருடைய அம்மா கூட எவ்வளவு சொல்லி தன்னிடம் முகம் கொடுத்த பேசாமலேயே இருந்து விட்டார் என்றும் சொல்லியிருந்தார்.

Also Read:ராஜ்கிரணின் மகளை திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர்.. மதம் பிரச்சனைகளை சமாளித்த காதல் ஜோடி

Trending News