ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகர் ராமராஜன். ஒரே வருடத்தில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
கிராமத்து படங்கள் என்றாலே அதில் ராமராஜன் தான் நடிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பும் வகையில் கிராமத்து நாயகனாக வலம் வந்தார். இவருடைய படங்கள் வெளியாகிறது என்றால் மற்றும் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாது அந்த அளவிற்கு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ராமராஜன்.
ஆனால் சில காலங்களுக்கு பிறகு ராமராஜன் கிராமத்து கதையில் நடித்து போரடித்து விட்டதால் கொஞ்சம் மாடர்னாக நடிக்க விரும்பினார். ஆனால் அந்த கேரக்டர் ராமராஜனுக்கு கொஞ்சமும் செட் ஆகாததால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் தோல்வியை தழுவியது.
இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து போனது. அதன் பின்னர் நடிகர் ராமராஜன் தன் சக நடிகையான நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் தற்போது திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பெற்றாலும் நடிகை நளினி மற்றும் ராமராஜன் இருவரும் ஒன்றாக தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் உடன் அடிக்கடி நேரம் செலவழித்து வருகின்றனர்.
தற்போது ராமராஜன் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. அதில் அவருடைய மகள் அச்சு அசல் நடிகை நளினியை போன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
