வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

58 வயதில் 4வது திருமணத்திற்கு ரெடியான நடிகர்.. கல்யாண பொண்ணுக்கும் இது 3வது திருமணமாம்

சமீபத்தில் 50 வயதை கடந்த நடிகர் ஒருவர் 23 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் தாண்டி 58 வயதாகும் நடிகர் ஒருவர் நான்காவது திருமணத்திற்கு தயாராகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் நடிகரின் நெருங்கிய உறவுக்காரரான இந்த நடிகர் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இவர் 44 வயது நடிகையுடன் படு நெருக்கமாக இருந்திருக்கிறார். இது தெரிந்த அவருடைய மூன்றாவது மனைவி பொது இடத்திலேயே அவர்களை கேவலப்படுத்தினார்.

Also read: பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்

அந்த கடுப்பில் மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்த நடிகர் இப்போது நான்காவது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பல திரைப்படங்களில் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அந்த நடிகைக்கு இது மூன்றாவது திருமணமாம். ஏற்கனவே முதல் கணவரை விவாகரத்து செய்த அந்த நடிகை இரண்டாவதாக ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்த அந்த நடிகை இப்போதுஅவரையும் விவாகரத்து செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ஆன்ட்டிக்கு இந்த நடிகருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கும் அளவுக்கு வந்திருக்கிறது.

இப்போது நடிகர் முறைப்படி மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டதால் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தான் தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது. ஒரு சிலர் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தாலும் பலரும் அவர்களுக்கு எதிராக கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

Also read: அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

Trending News