வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

சினிமாவிற்காக பெயரை மாற்றிய 6 பிரபலங்கள்.. இளையராஜா முதல் குஷ்பூ வரை

தமிழ் திரையுலகில் சில பிரபலங்கள் சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்களின் நிஜ பெயரை சொன்னால் இந்தப் பிரபலம் யார் என்று தெரியாத அளவுக்கு உள்ளது. அவ்வாறு நமக்கு மிகவும் பரிச்சயமான பிரபலங்களின் உண்மை பெயர்களை பார்க்கலாம்.

இளையராஜா: தமிழ் சினிமாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக இசையால் ரசிகர்களின் மனதை ஆட்சி செய்கிறார் இசைஞானி இளையராஜா. இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரத்தில் பிறந்துள்ளார். தலித் குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஞானதேசிகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் பள்ளி படிக்கும் போது அவருடைய தந்தை ராஜையா என்ற பெயரை மாற்றியுள்ளார். பின்பு எல்லோரும் ராஜா என்று அழைக்கத் தொடங்கினர். தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் இளையராஜா என பெயரிட்டார்.

ராகவா லாரன்ஸ்: நடிகர், இயக்குனர், நடன ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவை அனைத்தையும் காட்டிலும் ஒரு நல்ல மனிதர். இவரின் இயற்பெயர் முருகையன். இவரின் சிறுவயதில் மூளையில் கட்டி இருந்ததால் அதை குணமடைய செய்ததற்காக ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வந்தார். அதன்பிறகு இவர் குணமடைந்தாலும், ராகவேந்திர சிவாமி மீது அதித ஈடுபாடு உள்ளதாலும் முருகையன் என்ற பெயரை ராகவேந்திரா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2001 இல் லாரன்ஸ் என்ற புனைப் பெயருடன் ராகவா லாரன்ஸ் என பெயரை மாற்றிக் கொண்டார்.

அஞ்சலி: தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகை அஞ்சலி. ஜீவாவின் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆந்திராவில் பிறந்த அஞ்சலியின் இயற்பெயர் பாலாதிரிபுரசுந்தரி. சினிமாவிற்காக தன் பெயரை அஞ்சலி என மாற்றிக் கொண்டுள்ளார்.

குஷ்பூ: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். குஷ்புவின் இயற்பெயர் நகாத் கான். இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தையிலிருந்தே நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கிய போது அவரது பெற்றோர் குஷ்பூ என பெயரை மாற்றினார்கள்.

ராஜ்கிரண்: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராஜ்கிரன். என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ராஜ்கிரன் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஜே. மொஹிதீன் அப்துல் காதர்.

மனோரமா: தமிழ் சினிமாவில் 1500 படங்களுக்கு மேல் நடித்த சாதனை படைத்தவர் மனோரமா. அதுமட்டுமல்லாமல் 300க்கும் மேற்பட்ட பாடல்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தா. இவரை ஆச்சி என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

Trending News