வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரஜினிக்காக விஜய்யை நிராகரித்த தகடு தகடு.. அரசியல்-ல இதெல்லாம் சாதாரணம்பா

தளபதி உடன் நடிக்க பலரும் போட்டி போட்டு வரும் நிலையில் பிரபல நடிகர் அந்த வாய்ப்பை ரிஜக்ட் செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி சமீபத்தில் அக்கட்சியின் முதல் மாநாடு நடத்திய நிலையில், அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே, அவரது கடைசிப் படமான விஜய்69 படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில், கே.வி.என். நிறுவனத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இப்படத்தில் விஜயுடன் இணைந்து, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் விஜய்யின் கேரியரில் முக்கியப் படமாகவும் ரூ.1000 கோடி வசூல் குவிக்கவுள்ள படமாகவும், சமூக கருத்துகள் கூறி, விஜய் அரசியல் கால்பதித்துள்ளதால் மக்களிடம் அவரை இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்க்ககூடிய படமாக இது இருக்கும் என்பதால் இப்படத்தின் மீது பன்மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் பாடல் காட்சிகள் ஆரம்பித்து ஒரு சில காட்சிகள் ஷூட்டிங் நடந்த நிலையில் இப்படத்தின் பிசினஸ் பல கோடிகளில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க 80, 90 களின் முன்னணி நடிகராக ஜொலித்த சத்யராஜை படக்கு அணுகியுள்ளனர். ஆனால் அவர் இப்படத்தை ரிஜக்ட் செய்ததாக தகவல் வெளியாகிறது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்யராஜ் இதுவரை நடிக்காத படங்கள் இல்லை, ஏற்காத கதாப்பாத்திரங்கள் இல்லை, ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்திருந்தார். சில ஆண்டுகளாக கேரக்டர் ரோல்களில் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில், விஜயின் நண்பன் படத்தில் கல்லூரியின் டீனாக நடித்து அசத்திய அவர், ராஜமெளலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து தேசிய அளவில் கவனம் பெற்ற பின் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜயின் கடைசிப் படமான விஜய்69 படத்தில் நடிக்க சத்யராஜை அணுகிய நிலையில் அவர் நிராகரித்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் தவெக தொடங்கியுள்ளதால் அக்கட்சியையும் அவரையும் புகழ்ந்து பேச வேண்டியிருக்கும். அதேபோல், விஜய்69 படத்தில் கதை பிடித்திருந்தாலும், விஜய் படமே ஆனாலும்கூட அவருக்கான சம்பளம் ஒத்துப்போகததால் சத்யராஜ் இப்படத்தை நிராகரித்தார் என கூறப்படுகிறது.

ஆனால், விஜய்யைப் பற்றி பல இடங்களில், பல நேர்காணல்களில் எப்போதும் புகழ்ந்தும் பாராட்டியும் பேசி வருகின்ற சத்யராஜ் கூலி படத்தில் நடித்து வருவதால் கால்ஷுட் பிரச்சனையால்தான் விஜய் படத்தில் நடிக்காமல் இருந்திருப்பார். மற்றபடி எல்லாம் ஒன்றுமில்லை என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

Trending News