செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

சார், இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு கோடி கொடுத்துருங்க.. பேராசையில் துடிக்கும் முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக போராடி கடந்த சில வருடங்களில் நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்தான் அந்த முன்னணி நடிகர். சினிமாவில் இவர் படாத கஷ்டமே இல்லை.

அதன்காரணமாக தற்போது தேவைக்கும் அதிகமாக பணம் குவிந்து வருகிறது. தற்போது இருக்கும் நடிகர்களில் நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு அதிக படங்களில் நடித்து வருபவரும் இவர்தான்.

ஊரே உயிர் பயத்தில் இருக்கும்போது இவர் மட்டும் அசால்டாக ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தார். என்றைக்கு முன்னணி நடிகர்களுக்கு வில்லன் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அப்போது இவரது மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது.

அதனால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடிக்க இவரையே பரிந்துரை செய்து வருகின்றனர். இதனால் சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி விட்டார்.

முதலில் ஒரு படத்திற்கு இவ்வளவு என வாங்கிக் கொண்டிருந்த நடிகர் தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஒரு சம்பளமும், ஹீரோவாக நடிக்க ஒரு சம்பளமும் வாங்கி வருகிறாராம்.

அதாவது ஹீரோவாக நடிக்க 20 முதல் 25 கோடியும், முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஒரு நாளைக்கு ஒரு கோடியும் சம்பளம் வாங்கி வருவதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தன.

எவ்வளவு சம்பாதித்தாலும் மனுஷன் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருப்பதால் இவரா கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என ரசிகர்கள் பலரும் இந்த விஷயத்தை நம்ப மறுக்கின்றனர்.

Trending News