வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்தியன் 2 வில் களமிறங்கும் பிரபல நடிகர்.. 6,7 வில்லன்களை பதம் பார்க்க போகும் கமல்

நடிகர் கமலஹாசனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு இந்தப் படம் தான் உலக நாயகனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்று சொல்லலாம். இந்தப் படத்தின் ரிலீஸை தொடர்ந்து கமலஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய பணிகளை தொடங்கி விட்டார்.

அரசியல் மற்றும் பிக் பாஸ் என பிஸியாக இருந்த உலக நாயகன் கமலஹாசன் அதே நேரத்தில் தன்னுடைய நீண்ட வருட கனவான இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பீகார் மற்றும் திருப்பதியில் நடந்தது. சமீபத்தில் 30 நாட்கள் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் ஷங்கர் பகிர்ந்து இருந்தார்.

Also Read: சுமூகமாக முடிந்த இந்தியன்2 பஞ்சாயத்து.. சர்வதேச அளவில் எகிறிய கமலின் மார்க்கெட்!

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் பிரபலமான நடிகர் ஒருவரும் இணைந்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பிரபல நடிகராக இருப்பவர் தான் சமுத்திரக்கனி. இவர்தான் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். சமுத்திரகனியை பொருத்தவரைக்கும் குணச்சித்திர கதாபாத்திரமாக இருக்கட்டும், வில்லன் கதாபாத்திரமாக இருக்கட்டும் தன்னுடைய எதார்த்தம் நிறைந்த நடிப்பை வெளிக்காட்டுபவர்.

Also Read: இந்தியன் 2-க்கு வந்த தலைவலி.. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது போல

சமுத்திரக்கனி தற்போது இந்த படத்தில் இணைந்திருப்பது இந்தியன் 2 திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. மேலும் இவர் இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியன் 2 திரைப்படத்தில் மொத்தம் 6,7 வில்லன்கள் நடிக்கிறார்கள். படத்தின் சண்டைக் காட்சியை தனுஷ்கோடியில் படமாக்க இருக்கிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு பெரிய விபத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் உயிரிழக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த வருடத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடந்து கொண்டு இருக்கிறது.

Also Read: 68 வயதில் செய்யக்கூடாததை செய்யும் கமல்.. படாதபாடு பட்டதால் வந்த வினை

Trending News