வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கோபத்தில் தளபதியாக மாறிய சஞ்சீவ்.. பிக்பாஸில் வெளியான பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான விவாத மேடை இரண்டு நாளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்தி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரெட் டிவி அணியை சேர்ந்த பிரியங்கா, தாமரையிடம் உங்களுக்கும், அண்ணாச்சிக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் பிரியங்கா கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே இடையில் வந்த சிபி, தாமரையிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விடுங்கள் என்கிறார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அபிஷேக் என்னடா எழுதி வைத்ததை கூட கேட்க விட மாட்டேங்குற என்று சொல்கிறார். அதற்கு சிபி இந்த கேள்வி எழுதவே இல்லை என்கிறார். உடனே கோபம் அடைந்த அபிஷேக் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடர்வோம் என்று பேச்சை பாதியிலேயே முடிக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சிபி எல்லா தடவையும் இடைவேளை விட்டு கொண்டே இருக்க முடியாது என்று கூறி கையில் இருக்கும் பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். இதனால் இந்த குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் இந்த சண்டையை பார்த்து எரிச்சல் அடையும் நடுவர் சஞ்சீவ் கோபமாக சைலன்ஸ் என்று கத்துகிறார். அவருடைய கோபத்தைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ந்து நிற்பது போல புரோமோ முடிகிறது.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு முறை நடந்த பிரஸ்மீட்டில் இதேபோன்று சைலன்ஸ் என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து கத்தினார். அப்போது இந்த நிகழ்வு மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் இப்போது அவரைப் போன்றே சைலன்ஸ் என்று கத்தி இருப்பது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

Trending News