விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன்பின் 2004 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் மன்மதன் படத்தில் தமிழ் சினிமாவிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் சந்தானம்.
அதன் பிறகு திடீரென்று நாயகனாக அவதாரம் எடுத்த நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்ற ஒரே முடிவில் இருக்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடித்து தோல்வியை சந்தித்தாலும், அதன்பின் வெற்றியை ருசிக்க தொடங்கினார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் படமான ‘தில்லுக்கு துட்டு’ இவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும் .அதன் பிறகு வெளியான தில்லுக்குதுட்டு2, டகால்டி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தாலும், கடந்த வருடம் வெளியான பிஸ்கோத்து ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தது.
இந்த சூழலில் 2021 ஆம் ஆண்டு இவர் ஹீரோவாக நடித்து திரைக்கு தயாராக உள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயகுமார், சபாபதி போன்ற படங்கள் வரிசையாக வெளியாக உள்ளது.
அதைப்போல் இவர் ஹீரோவாக நடித்து வந்த மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும், மத கஜ ராஜா ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் கூடிய விரைவில் தொடங்கப்படும்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் சில புதிய படங்களை சந்தானம் கமிட்டாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது. மேலும் இவர் தயாரிப்பாளராகவும் திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆகையால் 2021 ஆம் ஆண்டில் சந்தானத்தின் சூப்பர் ஹிட் படங்கள் எல்லாம் அணிவகுத்து தயாராக இருப்பதால், சென்ற வருடம் விட்டதைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.