திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஒரு ரூபாய் கூட குறைக்காத சந்தானம்.. டிடி ரிட்டன்ஸ் படத்துக்கு வாங்கிய சம்பள தொகை

Actor Santhanam: சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரைக்கும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. டாப் நடிகர்கள் எல்லோர் படத்திலும் இவர்தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நிற்க கூட நேரமில்லாத அளவிற்கு அப்போது வெளியான எல்லா படங்களிலும் சந்தானம் நடித்து வந்தார். சில படங்களில் ஹீரோவை விட இவருக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார். அதுதான் சந்தானத்திற்கு மிகப்பெரிய சருக்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய பிளாப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். ஆனாலும் மனம் தளராமல் அடுத்தடுத்து ஹீரோ கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also Read : முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

இதனால்தான் தயாரிப்பாளர்கள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். ஆனாலும் சந்தானம் தனது சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைத்துக் கொள்ளாமல் கரார்காட்டி வருகிறாராம். அந்த வகையில் நாளை சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு சந்தானம் திரில்லர் ஜானரே தேர்ந்தெடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து படத்தை பிரமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம் தான் எல்லோரையும் வாயை பிளக்க செய்கிறது.

Also Read : எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

அதாவது இப்படத்திற்கு 5 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம். பெரிய நடிகர்களை தவிர்த்து அடுத்த கட்ட நடிகர்கள் இப்போது 5 முதல் 10 கோடி சம்பளம் தான் வாங்கி வருகிறார்கள். அவ்வாறு இப்போது உள்ள ஹீரோக்களுக்கு சமமாக தனது சம்பளத்தை படத்திற்கு படம் உயர்த்திக்கொண்டே சந்தானம் போகிறார்.

மேலும் இந்த படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றால் மட்டுமே தயாரிப்பாளர் தலை தப்பும். அதோடு மட்டுமல்லாமல் சந்தானம் இப்போது மீண்டும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார். ஹீரோவாக வாங்கும் சம்பளத்தை இந்த படங்களுக்கும் கேட்டு வருகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : ஹீரோ வேண்டாம் காமெடியை கையில் எடுத்த சந்தானம்.. கூட்டணி போட போகும் 3 டாப் ஹீரோக்கள்

Trending News