வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

Santhanam: காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் சந்தானம் தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகளை ஒரு ட்ராக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கும்போது, அதிலிருந்து வித்தியாசமாக காமெடி காட்சிகளை மாற்றி மீண்டும் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியை நினைவுக்கு கொண்டு வந்தவர் தான் நடிகர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் இவருடைய காமெடி காட்சிகள் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தாலும், பின்னர் மிகப்பெரிய ரீச் அடைந்தது.

குறுகிய காலத்திலேயே சந்தானம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார். இளம் ஹீரோக்களின் படங்கள் எல்லாவற்றிலும் சந்தானம் இடம்பெற்றார். சந்தானத்தின் காமெடிக்காகவே வெற்றி பெற்ற படங்களும் இருக்கின்றன. இப்படி அவர் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் பொழுது தான் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு படங்கள் வழக்கமான தன்னுடைய காமெடி பாணியில் நடித்தார்.

Also Read:எவ்வளவு டென்ஷன் ஆனாலும் நடிகை மீது கை வைக்காத ஒரே இயக்குனர்.. சீக்ரெட்டை புட்டு புட்டு வைத்த சந்தானம்

இந்த படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் நம்ம ஹீரோவாக ஏற்றுக் கொண்டார்கள் என்று தவறாக புரிந்து கொண்ட சந்தானம் அடுத்தடுத்து சீரியஸ் ஹீரோவாக படம் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த படங்களும் அவருக்கு தொடர் தோல்வியை கொடுத்தன. சந்தானம் இல்லாமல் தமிழ் சினிமாவின் காமெடி உலகில் மிகப்பெரிய வெற்றிடமும் ஏற்பட்டது.

சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுத்து வந்த போது அவருடைய ரசிகர்கள் மீண்டும் அவர் காமெடியனாக நடிக்க வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். ஆனால் சந்தானம் நடித்தால் இனி ஹீரோ தான் என வம்படியாக நடித்து மொத்த மார்க்கெட்டையும் இழந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

Also Read:சந்தானத்துக்கு போட்டியாக சதீஷ் செய்யும் மேஜிக்.. வைரலாகும் வித்தைக்காரன் டீசர்

சமீபத்தில் அவருடைய டிடி ரிட்டன்ஸ் பட ப்ரமோஷன் விழாவில் பேசிய போது தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காமெடி கேரக்டர்கள் கிடைத்தால் காமெடியானாக நடிப்பேன் என சொல்லி இருக்கிறார். சந்தானத்திற்கு மார்க்கெட் மொத்தமாக போய்விட்டது. இதை எப்படி சமாளித்து காமெடி ரூட்டுக்கு வருவது என்று தெரியாமல் இப்படி உருட்டி இருக்கிறார்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானமும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து இவர் காமெடியனாக நடிக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சந்தானத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருப்பவர் ராஜேஷ். மீண்டும் அவர் மூலம் சந்தானம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பார் என தெரிகிறது.

Also Read:ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்

Trending News